'இந்தியைப் பயிற்றுமொழி ஆக்குவது மொழி திணிப்பே'

'இந்தியைப் பயிற்றுமொழி ஆக்குவது மொழி திணிப்பே'

2 mins read
0844220d-4a4e-4314-aaae-0b683f255b6b
-

கேரள முதல்வர்: 'ஒரே தேசிய மொழி' என்பது நம்முடைய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது

திரு­வ­னந்­த­பு­ரம்: இந்தி மொழி பேசும் மாநி­லங்­களில் உள்ள ஐஐடி போன்ற தொழில்­நுட்­பம் மற்­றும் தொழில்­நுட்­பம் சாராத உயர் கல்வி நிறு­வனங்­களில் இந்­தி­யைப் பயிற்று மொழி­யாக ஆக்க வேண்­டும்.

பிற மாநி­லங்­களில் வட்­டார மொழி­கள் பயிற்­று­மொ­ழி­யாக இருக்க வேண்­டும் என்று அமித் ஷா தலை­மை­யி­லான அலு­வல் மொழி­க­ளுக்­கான நாடா­ளு­மன்­றக் குழு­வின் 11வது அறிக்­கை­யில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

மேலும், ஆங்­கி­லம் மூலம் பயிற்று­விப்­பதை விருப்­பத் தேர்­வாக மாற்­ற­லாம் என­வும் குழு தெரி­வித்­தி­ருந்­ததாக கூறப்­ப­டு­கிறது.

இந்த விவ­கா­ரம் குறித்து கேரள முதல் அமைச்­சர் பின­ராயி விஜ­யன்(படம்), பிர­த­மர் மோடிக்கு கடி­தம் ஒன்றை எழு­தி­யுள்­ளார்.

அதில், 'இந்­தி­யா­வில் பல்­வேறு மொழி­கள் பேசப்­ப­டு­கின்­றன. அதில் ஒரு மொழியை மட்­டும் தேசிய மொழி­யாக அறி­விக்க முடி­யாது. உயர் கல்வி நிறு­வ­னங்­களில் இந்­தியை மட்­டும் முதன்மை மொழி­யா­கவோ அல்­லது பயிற்­று­மொ­ழி­யா­கவோ மாற்றிவிட முடி­யாது.

ஏற்­கெ­னவே பொதுத்­துறை நிறு­வ­னங்­களில் இளை­ஞர்­க­ளுக்­கான வாய்ப்­பு­கள் குறை­வாக உள்­ளது.

இந்த நிலை­யில், அவர்­களில் பாதிப்பேருக்கு மேல் உள்­ள­வர்­க­ளைப் பாதிக்­கும் எந்த ஒரு நட­வ­டிக்­கை­யும் சமூக நல­னுக்கு நன்மை பயக்காது. கல்­வித் துறை­யில் மாநி­லம் சார்ந்த பார்­வை­களும் அங்­கீ­கரிக்­கப்­பட வேண்­டும்.

பயிற்­று­மொ­ழி­கள் விவ­கா­ரத்­தில் அவ­ச­ரப்­பட்டு மத்திய அரசு எந்த முடி­வை­யும் எடுத்­து­வி­டக் கூடாது.

இந்­திய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தேசிய மொழி­களும் ஊக்­கப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

மேலும், மற்ற மொழி­களைவிட ஒரு மொழியை மட்­டுமே பயிற்­று­மொ­ழி­யாக முன்­னி­லைப்­ப­டுத்­து­வது இந்தித் திணிப்­பா­கவே பார்க்­கப்­படும். இது, நம்­மு­டைய கூட்­டாட்­சித் தத்­து­வத்­திற்கு ஏற்புடையதல்ல. எனவே, நாடா­ளு­மன்ற நிலைக்­குழு­வின் இந்தி பயிற்­சி­மொழி விவ­கா­ரத்­தில் பிர­த­மர் நரேந்திர மோடி தலை­யிட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று நான் கேட்­டுக்கொள்­கிறேன்," என்று அதில் கூறப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக, இதே கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்த தமிழக முதல் அமைச்­சர் மு.க. ஸ்டா­லின், மத்­திய அரசு இந்­தியைப் புகுத்தி மீண்­டும் ஒரு மொழிப்­போரை எங்­கள் மீது தூண்ட வேண்­டாம் என்று எச்­ச­ரிக்கை விடுத்து இருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.