இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் பதவி விலகல்

இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் பதவி விலகல்

1 mins read
9bedaaaf-69bb-4022-9ab1-308d9b74a7eb
-

பெங்­க­ளூரு: மென்­பொ­ருள் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான இன்­ஃபோ­சிஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் ரவிக்­கு­மார் (படம்) செவ்­வாய்க்­கிழமை பதவி வில­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இன்­ஃபோ­சிஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் பொறுப்­பில் இருந்து ரவிக்­கு­மார் வில­கி­ய­தால் நிறு­வ­னத்­துக்­குப் பெரும் இழப்பு என­வும், நிறு­வ­னத்­திற்கு அவர் ஆற்­றிய சேவை­க­ளுக்­காக அந்­நி­று­வ­னத்­தின் இயக்­கு­நர் குழு பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க்­கில் வசித்­து­வ­ரும் ரவிக்­கு­மார், இன்­ஃபோ­சிஸ் நிறு­வ­னத்­தில் இரு­ப­தாண்­டு­கள் பணி­யாற்­றி­யுள்­ளார்.

2016ஆம் ஆண்­டில் தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு இன்­ஃபோ­சிஸ் நிறு­வ­னத்­தில் பல்­வேறு துறை சார்ந்த பொறுப்­பு­களை வகித்­த­து­டன் காப்­பீடு மற்­றும் கட்­டண வணி­கத்­தை­யும் வழி­ந­டத்­தி­னார்.

ரவிக்­கு­மா­ரின் பதவி வில­க­லைத் தொடர்ந்து அந்­நி­று­வ­னத்­தின் பங்கு விலை நேற்று முன்­தி­னம் 2.65 விழுக்­கா­டாக சரிந்­தது.

ரவிக்­கு­மார், இன்­ஃபோ­சிஸ் நிறு­வ­னத்­தின் உலக அள­வில் உள்ள அனைத்து தொழில் சேவைப் பிரி­வு­கள் உள்­ளிட்ட பல துறை­க­ளை­யும் கவ­னித்து வந்­தார்.