கர்நாடகாவில் வெள்ளம்

கர்நாடகாவில் வெள்ளம்

1 mins read
beabc3f0-5253-4835-b1ed-a84fb9e3a466
-

பெங்­க­ளூர்: கர்­நா­ட­கா­வில் கடந்த சில நாள்க­ளாக பர­வ­லாக மழை பெய்து வரு­கின்­றது. குறிப்­பாக கொப்­பல் மாவட்­டத்­தில் விடாது பெய்த கன­ம­ழை­யால் ஏற்­பட்ட வெள்­ளம், பல்­வேறு முக்­கிய நெடுஞ்­சா­லை­களை அடித்துச் சென்­று­விட்­டது. தாம்­பூர் அருகே கட்­டப்­பட்டு வரும் ரயில்வே சுரங்­கப்­பாதை கட்டுமானத்தையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சாலை­களில் பெரும் பள்­ளங்­கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தால் கன­ரக வாக­னங்­கள் சாலைகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கலா­புர்கி, யாத்­புரி, கொப்­பல், குடகு, வல்­லாரி, சித்­ர­துர்கா, சிக்­க­மங்­க­ளூரு, சிக்­க­பள்­ளா­பூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று மஞ்­சள் எச்­ச­ரிக்கை விடுக்கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், உத்­தரப் பிர­தே­சத்­தில் கடந்த சில நாள்­க­ளா­கத் தொடர்ச்­சி­யா­கப் பெய்­து­வ­ரும் கன­ம­ழை­யால் பல இடங்­களில் வெள்­ளப்பெருக்கு ஏற்­பட்­டுள்­ளது. வெள்­ளத்­தில் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 11ஆக உயர்ந்­துள்­ளது­. 17 மாவட்­டங்­களில் 900 கிரா­மங்­களில் வாழும் ஏறக்­கு­றைய 8.43 லட்­சம் மக்­க­ளின் இயல்­பு­நிலை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.