காலணியில் பதுங்கியிருந்த நாகப்பாம்பு ஒன்ஸ திடீரென படமெடுத்து ஆடும் காணொளி டுவிட்டர் தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தரையில் காலணி ஒன்று உள்ளது. அதற்குள் நாகம் ஒன்று சுருண்டுகிடக்க காணப்படுகிறது. பாம்பைப் பிடிக்கும் கொக்கியால் காலணியை ஒருவர் நகர்த்தும்போது, நாகம் ஆவேசத்துடன் அதன் தலையை உயரத்தி படம் எடுப்பதைக் காணொளியில் காணமுடிகிறது.
இச்சம்பவம் இந்தியாவின் மைசூரில் நடந்ததாக காணொளியில் விளக்கப்பட்டது.
இந்தக் காணொளி பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இவ்வாறு நடப்பது இது முதல்முறை அல்ல. மழைக்காலத்தின்போது நாகங்கள் உள்ளிட்ட மற்ற பாம்பு வகைகள் வித்தியாசமான இடங்களில் ஒளிந்துகொள்ளும். இதனால் மக்கள் அதிக கவனமாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

