ஐம்பது ஆண்டுகளில் காணாத தொடர் மழை

ஐம்பது ஆண்டுகளில் காணாத தொடர் மழை

2 mins read
5b3c8df0-2797-4d0d-903a-3235a0e02842
அனந்தபூர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள். படம்: தகவல் ஊடகம் -

அம­ரா­வதி: கடந்த ஐம்­பது ஆண்டு­களில் இல்­லாத வகை­யில் ஆந்­தி­ரா­வில் கன­மழை கொட்­டித் தீர்த்­துள்­ளது. அனந்­த­பூர் உள்­ளிட்ட சில மாவட்­டங்­களில் நேற்று முன்­தி­னம் விடிய விடிய பெய்த இடை­வி­டாத மழை­யால் ஏரா­ள­மான குடி­யி­ருப்­புப் பகு­தி­களை வெள்­ளம் சூழ்ந்­தது.

ஆந்­திர மாநி­லத்­தில் கடந்த சில நாள்­க­ளாக விட்­டு­விட்டு மழை பெய்து வந்­தது. இந்­நி­லை­யில், செவ்­வாய்க்­கி­ழமை இரவு முதல் அனந்­த­பூர், ஸ்ரீசத்­ய­சாய் மாவட்­டங்­களில் மழை வெளுத்­துக் கட்­டி­யது. தொடர் மழை கார­ண­மாக இம்மாவட்­டங்­களில் உள்ள அனைத்து ஓடை­கள், ஏரி­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

அனந்­த­பூர் நக­ரில் உள்ள ஏரா­ள­மான குடி­யி­ருப்­புப் பகு­தி­களை வெள்ள நீர் சூழ்ந்­துள்­ளது. இத­னால் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் வீடு­களை விட்டு வெளி­யேற முடி­யா­மல் தவித்து வரு­கின்­ற­னர். யாலேறு, ஆல­மூர் ஏரி­களில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்­துள்­ள­தால், அதன் கரை­யோ­ரப் பகு­தி­களில் உள்ள வீடு­க­ளுக்­குள் வெள்­ள­நீர் புகுந்­த­தில், பல லட்ச ரூபாய் மதிப்­புள்ள பொருள்­கள் சேதம் அடைந்­து­விட்­ட­தாக அப்­ப­குதி மக்­கள் கவலையு­டன் தெரி­வித்­த­னர்.

அனந்­த­பூர், ஸ்ரீசத்­ய­சாய் மாவட்­டங்­களில் உள்ள குறிப்­பிட்ட சில பகு­தி­களில் மூன்­றடி உய­ரத்­துக்கு மழை நீர் சாலை­களில் வெள்­ளம்­போல் ஓடி­யது. இத­னால் பீதி­ய­டைந்த பொது­மக்­கள் தங்­கள் வீட்டு மாடி­யில் தஞ்­ச­ம­டைந்­த­னர்.

கடந்த 50 ஆண்­டு­களில் இது போன்ற கன­மழை பெய்­த­தில்லை என்று பொது­மக்­கள் கூறும் நிலை­யில், பாதிக்­கப்­பட்ட மக்­களை பட­கு­கள் மூலம் வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கர்­நா­டகா நில­வ­ரம்

இதற்­கி­டையே அண்டை மாநி­ல­மான கர்­நா­ட­கா­வின் வடக்­குப் பகு­தி­களில் மழை நீடித்து வரு­கிறது. விஜ­யாப்­புரா மாவட்­டத்­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­கள் வெள்­ளத்­தால் சூழப்­பட்­டுள்­ளன.

அங்­குள்ள தோனி ஆற்­றில் கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு உள்­ளது. இத­னால் வட­கர்­நா­ட­கத்­தில் பல ஆயி­ரம் ஏக்­க­ரில் பயி­ரி­டப்­பட்ட சோளம், மக்­கா­சோ­ளம் உள்­ளிட்ட பயிர்­கள் தண்­ணீ­ரில் அடித்து செல்­லப்­பட்­டன.

1,300 கிரா­மங்­கள் பாதிப்பு

வட­மா­நி­லங்­க­ளி­லும் மழை தீவி­ர­ம­டைந்து வரு­கிறது. உத்­த­ரப் பிர­தே­சத்­தில் சுமார் 1,300க்கும் மேற்­பட்ட கிரா­மங்­கள் மழை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த சில தினங்­களில் மட்­டும் அங்கு வெள்­ளப்­பெ­ருக்­கில் சிக்கி மூன்று பேரும் மின்­னல் தாக்கி ஒரு­வ­ரும் பாம்பு கடித்து ஒருவரும் என ஆறு பேர் உயிரிழந்து­விட்டனர்.

மழை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக மீட்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு முதல்வர் யோகி ஆதித்­ய­நாத் உத்­த­ர­விட்­டுள்­ளார்.