அமராவதி: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்க ளில் கனமழையும் வெள்ளப் பெருக்கும் நீடித்து வருகிறது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் சில மணி நேரங்கள் நீடித்த பலத்த மழையால் சாலைகள், குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது. இருசக்கர வாகனங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஆந்திராவில் சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் அம்மாநி லத்தில் உள்ள கால்வாய் கள், குட்டைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. வெள்ளம் சூழ்ந்த கிரா மங்கள் தனித்தீவுகளைப் போல் காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

