வீடு பறிபோகும் நிலையில் பரிசாக வந்த ரூ.70 லட்சம்

வீடு பறிபோகும் நிலையில் பரிசாக வந்த ரூ.70 லட்சம்

1 mins read
4e130b51-79d7-474a-a484-c532ba274bdb
-

திரு­வ­னந்­தபுரம்: வங்­கிக் கடனை திருப்­பிச் செலுத்த முடி­யா­மல் வீட்டை இழக்­கும் இக்­கட்­டான சூழ்­நி­லை­யில் இருந்த மீன் வியா­பா­ரிக்கு பரி­சுச்­சீட்டு (லாட்­டரி) மூலம் ரூ.70 லட்­சம் கிடைத்­தது.

கேரள மாநி­லம் கொள்­ளம் பகு­தி­யைச் சேர்ந்த 40 வய­தான பூக்­குஞ்சு கடந்த எட்டு ஆண்டு­க­ளுக்கு முன்­னர் வீடு கட்­டு­வ­தற்­காக வங்­கி­யில் இருந்து ரூ. 7.45 லட்­சம் கடன் பெற்­றார்.

ஆனால் திட்­ட­மிட்­ட­படி அந்­தக் கடன் தொகையை அவ­ரால் திருப்­பிச் செலுத்த முடி­ய­வில்லை.

இத­னால் வட்­டி­யும் அச­லு­மாக அவ­ரது கடன் தொகை ரூ. 12 லட்­ச­மாக உயர்ந்­து­விட்­டது.

இதை­ய­டுத்து அந்த வங்கி மேற்­கொண்ட சட்­ட­பூர்வ நட­வ­டிக்கை கார­ண­மாக, அவ­ரது வீட்டை ஜப்தி செய்ய நோட்­டீஸ் அனுப்­பப்­பட்­டது.

இத­னால் பூக்­குஞ்சு மனம் கலங்கி நின்­றார். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்­தில் திடீர் திருப்­பம் நிகழ்ந்­த­து. கேரள அரசு நடத்­திய பரி­சுச் சீட்­டுக் குலுக்­கலின் மூலம் பூக்­குஞ்­சு­வுக்கு ரூ.70 லட்­சம் கிடைத்த தக­வல் வந்து சேர்ந்­தது.

இதை­ய­டுத்து கைவிட்­டுப்­போன தன் வீட்டை அவர் மீட்க வழி­பி­றந்­துள்­ளது.

எப்­போ­தா­வது பரி­சுச் சீட்டு வாங்­கும் தமக்கு இவ்­வ­ளவு பெரிய தொகை கிடைக்­கும் என எதிர்­பார்க்­க­வில்லை என்றும் இனி தன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றும் கூறு­கி­றார் பூக்­குஞ்சு.