புதுடெல்லி: உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 101வது இடத்தில் இருந்தது.
ஒரே ஆண்டில் இந்தியா ஆறு இடங்கள் பின் தங்கி யுள்ளது. அண்டை நாடுகளான பங்ளாதேஷ், பாகிஸ்தான், நேபாளத்தைவிட இந்தியா இந்தப் பட்டியலில் கீழ் இறங்கியுள்ளது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

