செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
97ad5ac7-c8a7-41dc-b0b6-d695b4e474ea
-

ஆந்திராவில் ராகுல் நடைப்பயணம்

பட்டினிக்குறியீடு; 107வது இடம்

புதுடெல்லி: உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 101வது இடத்தில் இருந்தது. ஒரே ஆண்டில் இந்தியா ஆறு இடங்கள் பின் தங்கி யுள்ளது. அண்டை நாடுகளான பங்ளாதேஷ், பாகிஸ்தான், நேப்பாளத்தைவிட இந்தியா இந்தப் பட்டியலில் கீழ் இறங்கியுள்ளது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

சாய்பாபா விடுதலை ரத்து

புதுடெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்தற்கு நேற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் அவரது சிறைவாசம் தொடரும் என கூறப்படுகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஹேம் மிஸ்ரா என்பவர், மாவோயிஸ்ட்டுகளுக்கும் பேராசிரியர் சாய் பாபாவுக்கும் இடையே தாம் தூது சென்றதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.