நிதின் கட்காரி: ரூ.1,082 கோடி செலவில் 'கேபிள்' மேம்பாலம்

நிதின் கட்காரி: ரூ.1,082 கோடி செலவில் 'கேபிள்' மேம்பாலம்

1 mins read
33d28ca4-8558-4f25-8e84-577595c51acb
-

புதுடெல்லி: நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணா நதியின் மீது ரூ.1,082.56 கோடி செலவில் நவீன 'கேபிள்' மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை இணைக்கும் விதமாக அமைக்கப்படும் இந்த மேம்பாலம், முப்பது மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

"இந்த வகை பாலம் உலகிலேயே இரண்டாவதாகவும் நம் நாட்டில் முதலாவதாகவும் இருக்கும்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சீனாவில் உள்ளது போல், கிருஷ்ணா நதியின் அழகைக் கண்டு ரசித்துக்கொண்டே செல்வதற்காக இந்த மேம்பாலத்தில் கண்ணாடி நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

மேலும், கோபுர வடிவிலான சிறப்பு விளக்குகளும் நிறுவப்பட உள்ளன.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இப்போதுதான் மத்திய அரசு இதற்கு செவிசாய்த்துள்ளது என்றும் ஆந்திர மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாலத்தில் பயணம் செல்வோர் அதன் இரு புறங்களிலும் உள்ள நல்லமல்லா காடுகள், மலைகள், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசித்தபடி பயணம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.