தாய்மொழியில் சட்டக்கல்வி: மோடி வலியுறுத்து

தாய்மொழியில் சட்டக்கல்வி: மோடி வலியுறுத்து

1 mins read
c770f22b-2347-40b4-a847-7cf6fd02c3c4
-

புது­டெல்லி: சட்­டப்­ப­டிப்பு தாய்­மொ­ழி­யில் கற்­பிக்­கப்­பட வேண்­டும் என பிர­த­மர் மோடி வலி­யு­றுத்தி உள்­ளார்.

குஜ­ராத்­தில் நடை­பெற்ற மாநில சட்ட அமைச்­சர்­கள் மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய அவர், உச்ச நீதி­மன்­றம், உயர் நீதி­மன்­றங்­க­ளின் முக்­கிய வழக்­கு­கள் அடங்­கிய மின்­னி­லக்க நூல­கத்தை உரு­வாக்க வேண்­டும் என்­றார்.

மேலும், அந்த நூல்­கள் மாநில மொழி­களில் உரு­வாக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

நீதித் துறை­யில் தாம­த­மாக நீதி வழங்­கப்­படும் விவ­கா­ரம் மிகப்­பெரிய சவா­லாக உரு­வெ­டுத்து இருப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், இப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தில் நீதித் துறை தீவிர கவ­னம் செலுத்தி வரு­வ­தாக தெரி­வித்­தார்.

நாட்­டின் குடி­மக்­கள் சட்­டத்தை முழு­மை­யாக அறிந்­து­கொள்ள மொழி தடை­யாக இருக்­கக்­கூடாது என்­றும் புதிய சட்­டங்­களை வரை­ய­றுக்­கும்­போது, சாமா­னிய மக்­கள் எளி­தில் புரிந்து கொள்­ளும் மொழி­யில் அவற்றை எழுத வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.

"மின்­னி­லக்க சட்ட நூல­கத்தை உள்­ளூர் மொழி­யில் உரு­வாக்க வேண்­டும். இது சாமா­னி­யர்­க­ளின் சட்ட அறிவை அதி­க­ரிக்­கும்.

"நாடு முழு­வ­தும் மின்­னி­லக்க நீதி­மன்­றங்­கள் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. கொரோனா கால­கட்­டத்­தில் காணொளி வாயி­லாக விசா­ர­ணை­கள் நடை­பெற்­றன. இது தவிர வழக்­கு­களை மின்­னணு முறை­யில் தாக்­கல் செய்­யும் திட்­ட­மும் ஊக்­கு­விக்­கப்­பட்டு வரு­கிறது," என்­றார் பிர­த­மர் மோடி.

நாட்­டில் புதி­தாக செயல்­பாட்­டுக்கு வந்­துள்ள '5ஜி' சேவை மூலம் நீதித்­து­றை­யின் மின்­னி­லக்­கத் திட்­டங்­கள் மேலும் துரி­தப்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.