திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் இரு பெண்களின் உடல் உறுப்புகள் பெங்களூரில் விற்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி, தமிழகத்தைச் சேர்ந்த பத்மாவும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூவர் கைதாகி உள்ளனர்.
கொலையுண்ட இருவரது உடல் உறுப்புகளும் மிக நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்ததை அடுத்து இச்சந்தேகம் எழுந்துள்ளது.
உடல் உறுப்புகள் விற்கப்பட்டனவா, கைதானவர்களுக்கு வேறு யாரேனும் உதவி செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

