இந்தித் திணிப்பு: புது வியூகம் அமைக்கும் மம்தா பானர்ஜி

அரசியல் பார்வையாளர்கள்: இந்தி எதிர்ப்பு மாநிலங்களை ஒருங்கிணைக்க வாய்ப்பு

கோல்­கத்தா: மத்­திய அரசு இந்தி மொழி­யைத் திணிப்­ப­தாக பல்­வேறு அர­சி­யல் கட்­சி­களும் தலை­வர்­களும் புகார் எழுப்­பி­யுள்ள நிலை­யில், மேற்­கு­ வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி, இவ்­வி­வ­கா­ரத்தை மத்திய அர­சுக்கு எதி­ரான புதிய அர­சி­யல் ஆயு­த­மாக பயன்­ப­டுத்­து­வார் என்­கி­றார்­கள் அர­சி­யல் பார்­வை­யாளர்­கள்.

இந்­தி­யா­வின் அதி­கா­ர­பூர்வ மொழி­யாக ஆங்­கி­லத்­துக்­குப் பதில் இந்­தி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா அண்­மை­யில் தெரி­வித்­தி­ருப்­பது புது சர்ச்­சைக்கு வித்திட்­டுள்­ளது.

தென் ­மா­நி­லங்­களில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலை­யில், முதல்­வர் மம்தா பானர்ஜி மத்­திய அர­சுக்கு எதிராக வரிந்­து­கட்ட தயா­ராகி வரு­கி­றார்.

"ஏற்­கெ­னவே பல்­வேறு பிரச்சி­னை­கள் தொடர்­பில் மத்­திய அரசு­டன் மோதி வரு­கி­றார் மம்தா. மேற்­கு ­வங்க நலன் சார்ந்த விஷ­யங்­களில் மத்­திய அரசு முட்­டுக்­கட்டை போடு­வ­தாக அவர் பல­முறை சாடி­யுள்­ளார்.

"இந்­நி­லை­யில் இந்­தித் திணிப்­புக்கு எதி­ரான அவ­ரது போராட்­டத்­துக்கு இந்தி பேசாத மாநி­லங்­களி­லும் தேசிய அள­வி­லான அர­சி­யல் களத்­தி­லும் எளி­தில் ஆதரவு கிடைக்­கக்­கூ­டும். இதைக் கணக்­கிட்டு முதல்­வர் மம்தா புதிய வியூகத்தை அமைக்­கும் வாய்ப்­புண்டு," என்­கி­றார் அர­சி­யல் பார்­வை­யா­ளர் நிர்­மல்யா பானர்ஜி.

கேரளா, தமி­ழ­கம், தெலுங்­கானா மாநி­லங்­க­ளைப் போன்றே மேற்கு வங்­கத்­தி­லும் ஆளு­நர், முதல்வர் இடை­யே­யான மோதல் தீவி­ர­ம­டைந்து வரு­கிறது. இந்­நிலை­யில், இந்தித் திணிப்புக்கு எதிரான மாநி­லங்­கள் என்ற புதிய குடை­யின் கீழ் எதிர்க்­கட்­சி­களைத் திரட்ட முதல்­வர் மம்தா முயற்சி செய்­யக்­கூ­டும் என்­பது அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இதற்­கி­டையே அமித்ஷா தலைமை­யி­லான மத்­திய அர­சின் அலு­வல்­பூர்வ மொழிக்­கான குழு­வின் பரிந்­து­ரை­க­ளுக்கு இந்­திய சோச­லிச ஒற்­றுமை மையம் (கம்யூ­னிஸ்ட்) கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், அனைத்து நிலை­களி­லும் குறிப்­பாக ஐஐடி, ஐஐ­எம் போன்ற உயர் கல்வி நிலை­யங்­களி­லும் மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லும் ஆங்­கி­லத்­துக்­குப் பதி­லாக இந்­தி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்ற பரிந்­து­ரையை ஏற்க இய­லாது என்று அம்­மை­யம் கூறி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!