செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
e4a5d7b5-62a7-43c4-aecc-a8a6da9149c7
-

நாடு முழுவதும் அதிரடி சோதனை

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்ட னர். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது. பயங்கரவாத குழுக்களுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளைத் துண்டிக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண் விவசாயிகளுக்காக புதிய திட்டம்

மும்பை: பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அதானி குழுமம் சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்படு கிறது. முதற்கட்டமாக 600 பெண் விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாதந்தோறும் அவர்களிடம் இருந்து 500 கிலோ பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. பெண் விவசாயிகளின் வணிகத்தை ஆண்டுதோறும் 20% அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.