'ஊழல் குறித்து என்னிடம் விசாரிக்கவில்லை'

'ஊழல் குறித்து என்னிடம் விசாரிக்கவில்லை'

1 mins read
3823769b-46f3-4eed-a60c-976e63a8f8ce
-

புது­டெல்லி: தம் மீது சுமத்­தப்­பட்­டுள்ள வழக்கு முழு­வ­தும் போலி­யா­னது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோ­டியா தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்­காக டெல்­லி­யில் உள்ள சிபிஐ அலு­வ­ல­கத்­தில் நேரில் முன்­னி­லை­யான அவ­ரி­டம் சுமார் ஒன்­பது மணி நேரம் கிடுக்­கிப்­பிடி விசா­ரணை நடை­பெற்­றது. அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தம் மீதான வழக்கு தொடர்­பில் எந்­த­வித ஆதா­ரங்­களும் சிபிஐ வசம் இல்லை என்று குறிப்­பிட்­டார்.

"என் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளின் பேரில் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. ஒன்­பது மணி நேரம் நடை­பெற்ற விசா­ரணை­யின்­போது கேட்­கப்­பட்ட கேள்­வி­களை வைத்து அனைத்­தை­யும் புரிந்துகொண்­டேன்.

"என் மீதான எந்த ஊழ­லை­யும் விசா­ரிப்­ப­தற்­காக நான் அழைக்­கப்­ப­ட­வில்லை. டெல்­லி­யில் 'ஆப­ரே­ஷன் தாமரை' நட­வ­டிக்­கையை வெற்­றி­பெ­றச் செய்­யவே இந்த விசா­ரணை நடந்­துள்­ளது," என்­றார் துணை முதல்­வர் மணீஷ் சிசோடியா.