விபத்தில் மாண்ட விமானியின் கடைசிப் பேச்சு: 'மகளை பத்திரமாக பார்த்துக்கொள்'

விபத்தில் மாண்ட விமானியின் கடைசிப் பேச்சு: 'மகளை பத்திரமாக பார்த்துக்கொள்'

1 mins read
fed3f753-bea2-4eec-89a9-2a7af96ceea6
-

மும்பை: கேதார் நாத் ஹெலி­காப்­டர் விபத்­தில் விமானி அனில் சிங் (57) உட்­பட ஏழு பேர் பலி­யா­யி­னர்.

இந்த விபத்து குறித்து செய்தி நிறு­வ­னம் ஒன்­றி­டம் அனில் சிங்­கின் மனைவி ஷீரின் அனந்­திதா கூறு­கை­யில், "கடை­சி­யாக நேற்று (திங்­கள்­கி­ழமை) அவர் என்­னி­டம் பேசி­னார். மகளுக்கு உடல்­நிலை சரி­யில்லை. மகள் ஃபேரோஸா சிங்கை பத்­தி­ர­மாக பார்த்­துக்­கொள் என்று என்­னி­டம் தெரிவித்­தார்.

"மலைப்­ப­கு­தி­யில் கால நிலை எப்­போ­தும் ஒரே மாதிரி இருக்­காது என்று அவர் என்­னி­டம் கூறி­யி­ருக்­கி­றார். இது ஒரு விபத்து, இதற்­காக நான் யாரை­யும் குறை­சொல்­ல­வும் இல்லை யார் மீதும் புகார் அளிக்கப் போவ­து­மில்லை," என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

அனந்­திதா திரைத்­து­றை­யில் எழுத்­தா­ள­ராக உள்­ளார்.