நடைப்பயணம் மேற்கொண்ட விவசாயிகள் மீது தாக்குதல்

நடைப்பயணம் மேற்கொண்ட விவசாயிகள் மீது தாக்குதல்

2 mins read
a06fbb0a-64fa-40cf-afcf-69a26c5fe241
-

திருப்­பதி: ஆந்­திர மாநி­லத்­தின் அம­ரா­வ­தி­யில் தலை­மைச் செய­ல­கம் அமைப்­ப­தற்­காக அங்­குள்ள 27 சிற்றூர்களைச் சேர்ந்த விவ­சா­யி­கள் கிட்­டத்­தட்ட 35,000 ஏக்­கர் விவ­சாய நிலத்தை அர­சுக்­குக் கொடுத்­த­னர்.

அப்­போது நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஒய்.எஸ்.எஸ்.ஆர் காங்­கி­ரஸ் கட்சி அதிக இடங்­களை கைப்­பற்றி ஆட்சி அமைத்­தது.

ஜெகன்­மோ­கன் ரெட்டி முத­ல­மைச்­ச­ராக பதவி ஏற்ற பிறகு ஆந்­தி­ரா­வில் மூன்று தலை­ந­க­ரங்­கள் அமைக்­கப்­படும் என அறி­வித்­தார்.

இந்த அறி­விப்­பிற்கு தெலுங்கு தேசம், பா.ஜ.க, ஜன­சேனா, காங்­கி­ரஸ் மற்­றும் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் எதிர்ப்பு தெரி­வித்­த­ன.

இதே­போல் அம­ரா­வ­தி­யில் தலை­மைச் செய­ல­கம் அமைக்க நிலம் கொடுத்த விவ­சா­யி­களும் பல்­வேறு போராட்­டங்­களில் ஈடு­பட்டு வந்­த­னர்.

இந்த நிலை­யில் அம­ரா­வ­தி­யில் தலை­மைச் செய­ல­கம் அமைக்க வேண்­டும் என 20,000க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் கடந்த 37 நாட்­க­ளாக ஆந்­திர மாநி­லம் முழு­வ­தும் நடைப் பேரணி வகுத்­துச் சென்று பல்­வேறு தரப்­பி­ன­ரி­டம் ஆத­ரவு திரட்டி வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் 37வது நாளாக ராஜ­முந்­திரி, ஹர்ஷ வள்ளி பகு­தி­யில் உள்ள ஒரு கோவிலில் வழி­பாடு செய்து­விட்டு நடைப் பய­ணத்­தைத் தொடங்­கி­னர்.

அப்­போது ஒய்.எஸ்.ஆர் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த எம்.பி.க்கள் மார்­தாணி பரத், பில்லி சுபாஷ் சந்­தி­ர­போஸ் தலை­மை­யில் ஏரா­ள­மான கட்சி நிர்­வா­கி­கள் திரண்டு வந்து ஆந்­தி­ரா­வில் மூன்று தலை­ந­க­ரங்­கள் அமைக்­கப்­பட வேண்­டும் என முழக்­க­மிட்­ட­னர்.

அப்­போது "விவ­சா­யி­கள், நாங்­கள் 35,000 ஏக்­கர் விவ­சாய நிலங்­களை தலை­மைச் செய­ல­கம் அமைப்­ப­தற்­காக கொடுத்து உள்­ளோம்.

"நீங்­கள் ஒரு ஏக்­கர் நிலத்­தைக்­கூட கொடுக்­கா­மல் மூன்று தலை­ந­க­ரம் அமைக்க வேண்­டும் என கூறு­வதை ஏற்க முடி­யாது," என்­ற­னர்.

இத­னால் ஆத்­தி­ரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் பெட்­ரோல் நிரப்­பிய பாட்­டில்­கள், குடி­நீர் பாட்­டில்­கள் மற்­றும் செருப்பு, கற்­களை விவ­சா­யி­கள் மீது வீசி சர­மா­ரி­யாக தாக்­கி­னார்.

இதில் விவசாயிகள் பலருக்கும் இலேசான காயம் ஏற்­பட்­டது. அதையடுத்து இரு தரப்பினரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதை­ய­டுத்து அங்கு பாது­காப்புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த காவல்துறையினர், பிரச்சினை மேலும் முற்றாமல் இருக்க இரண்டு தரப்­பி­ன­ரை­யும் சமா­தா­னம் செய்து அனுப்பி வைத்­த­னர்.