செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5fd9eb3a-99d8-43e9-959f-fe650365928e
-

வங்­கக் கட­லில் புயல் உரு­வா­கிறது

புது­டெல்லி: தெற்கு அந்­த­மா­னில் உள்ள வளி மண்­டல சுழற்சி 24 மணி நேரத்­தில் காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகு­தி­யாக வலுப்­பெ­றும். காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகுதி வட­மேற்கு திசை­யில் நகர்ந்து மத்­திய வங்­கக் கட­லில் காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­ல­மாகி பின்­னர் புய­லாக மாறும் என்று இந்­திய வானிலை நிலை­யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர்

காமே கவுடா கால­மா­னார்

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தின் மண்­டியா மாவட்­டத்­தில் உள்ள தாச­ன­தொட்டி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் காமே கவுடா (86). ஐம்­பது ஆண்­டு­க­ளுக்கு முன் ஏற்­பட்ட வறட்­சி­யால் அங்­கி­ருந்த தாவ­ரங்­களும், கால்­ந­டை­களும் இறக்­கும் நிலை ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, 16 குளங்­களை தனி ஆளாக சொந்­தப் பணத்­தில் வெட்­டி­னார். இதன் கார­ண­மாக வறண்ட பூமி­யாக இருந்த அந்த கிரா­மமே நெல், கரும்பு விளை­யும் நில­மாக மாறி­யது. இந்­நி­லை­யில் முதுமை கார­ண­மாக காமே கவுடா திங்­கள்­கி­ழமை கால­மா­னார்.

210 கிராம் எடை­யுள்ள முட்டை

கோலாப்பூர்: மகா­ராஷ்­டிரா மாநி­லத்தின்­ கோலாப்­பூர் மாவட்­டத்­தில் உள்ள தால்­சாண்டே கிரா­மத்­தில் ஒரு கோழிப்­பண்ணை உள்­ளது. இந்த பண்­ணை­யில் உள்ள 'ஹைலைன் டபிள்யூ-80' இனத்­தைச் சேர்ந்த ஒரு கோழி 210 கிராம் எடை­யில் முட்­டை­யிட்­டுள்­ளது. இது கோழி இடும் முட்­டை­களில் நாட்­டி­லேயே மிகப்­பெ­ரிய மற்­றும் அதிக எடை கொண்­டது என கூறப்­ப­டு­கிறது.

கன­ம­ழை­யால் புனே­யில்

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புனே: புனே­யில் நேற்று முன்­தி­னம் இரவு 10 மணியில் இருந்து தொடர்ச்சியாக கன­மழை பெய்தது. விடிய விடிய மழை பெய்­த­தால் சாலைகள், தண்டவாளங்கள், குடியிருப்புப் பகுதிகளை வெள்­ளம் சூழ்ந்­தது. நேற்று முன்­தி­னம் காலை 5.30 மணி வரை­யில் 10 செ.மீ மழை அளவு பதி­வா­ன­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்து உள்­ளது. மழை­யின் கார­ண­மாக புனே ரெயில், வாகனம், விமா­னப் போக்குவரத்துகள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

அதிக புகழ்­பெற்ற இந்­திய உண­வாக ஹைத­ரா­பாத் 'ஹலீம்' தேர்வு

புனே: இந்­திய உணவு வகை­களில் புகழ்­பெற்ற ரச­குல்லா, பிகா­னரி புஜியா, ரட்­லாமி சேவ் உள்­ளிட்ட 17 உணவு வகை­களில் ஹைத­ரா­பாத்­தின் 'ஹலீம்' அதிக புகழ்­பெற்ற இந்­திய உண­வாக புவி­சார் குறி­யீடு பெற்று வென்­றுள்­ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் அக்­டோ­பர் மாதம் 9ஆம் தேதி வரை, இந்­தியா மற்­றும் பல்­வேறு நாடு­களில் இதற்­கான வாக்­கெ­டுப்பு மக்­க­ளி­டையே நடத்­தப்­பட்­டது. இதில், ஹைத­ரா­பாத் ஹலீம் முத­லி­டத்தை பிடித்து வெற்றி பெற்­றது.