மஞ்சள் எச்சரிக்கை; பள்ளிகள் மூடல்; ஆசியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்கா மூழ்கியது தண்ணீரில் தத்தளிக்கும் பெங்களூர்; கார்கள் சேதம்

மஞ்சள் எச்சரிக்கை; பள்ளிகள் மூடல்; ஆசியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்கா மூழ்கியது தண்ணீரில் தத்தளிக்கும் பெங்களூர்; கார்கள் சேதம்

2 mins read
da3370c9-329f-420d-b308-477c1dd2ab61
மெஜஸ்டிக் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததால் அவை சேதமடைந்தன. படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: பெங்­க­ளூ­ரில் புதன்­கி­ழமை இரவுமுதல் விடிய விடிய கொட்­டித் தீர்த்த பேய் மழை­யால், நக­ரின் கிழக்கு, தெற்கு, மத்­தி­யப் பகு­தி­கள் தண்­ணீர் தேங்கி வெள்­ளக்­கா­டா­கக் காட்சி அளித்­தன.

"இந்­தப் பாதிப்பு இத்­தோடு முடிந்­து­வி­டாது, அடுத்த மூன்று நாள்­க­ளுக்­குத் தொட­ரும்," என இந்­திய வானிலை மையம் எச்ச ரிக்கை விடுத்­துள்­ளது.

இதன்­ கா­ர­ண­மாக அங்கு மஞ்­சள் எச்­ச­ரிக்கை விடுக்­கப்பட்­டு, பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அளிக்­கப்­பட்­டுள்­ளது. அலு­வ­ல­கம் செல்­பவர்­கள் வீட்­டில் இருந்­த­ப­டியே வேலை செய்­யும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

கனமழையால் பெங்­க­ளூர் நக­ரின் பெல்­லாந்­தூர், சிவாஜி நகர், இந்­திரா நகர் உள்­ளிட்ட தாழ்­வான பகு­தி­களில் குளம்­போல் மழை­நீர் தேங்­கி­யது. சில வீடு­க­ளி­லும் தண்­ணீர் புகுந்­தது.

சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். பலரும் மெட்ரோ ரயில் சேவையை நாட வழக்கத்தை விட மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பெங்களூர் சிவாஜி நகரில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. சிலர் மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீருக்குள் இறங்கி அடித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்களை சிரமப் பட்டு மீட்டனர்.

தற்போது இதுதொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த மழை இன்னும் சில நாள்கள் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளதால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, தும்கூர் மாவட்டம், பாவகடாவில் 14,800 கோடி ரூபாய் செலவில், 13,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி உற்பத்திப் பூங்கா, மழை நீரில் மூழ்கியதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர்மழையால் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. திரு மணி ஏரி நிரம்பி, உபரி நீர் பூங்கா விற்குள் பாய்கிறது.

இப்பூங்காவில் 2,050 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், மின் உற்பத்தி இப்போது கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது.