வரவேற்க தமிழ்நாடு காத்து இருக்கு வாழ்வுதர எங்களின் வாத்து இருக்கு

எங்கு பார்த்­தா­லும் செழுமை. அறுவடையான வயல், வாய்க்­கால், குளம் நீர்­நி­லை­கள் எங்கும் தண்ணீர். வயல்­களில் கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு வாத்­து­கள்.

வாய்க்­கா­லில் மூழ்­கி­யும் எழுந்­தும் கும்­மா­ள­மிட்டு திரிந்­து­கொண்­டி­ருந்­தன. குவாக் குவாக் சத்­தம்­காதில் ரீங்காரமிட்டது.

வண்­டியை நிறுத்­தி­விட்டு சுற்றும் முற்­றும் பார்த்­தேன். சாலை­யின் ஓரமாக இருந்த ஒரு குளக்­கரை­யில் இந்த மாது அமர்ந்­தி­ருந்­தார்.

குச்­சி­யு­டன் இருந்த அவரை அணுகி இந்த வாத்­துகள் உங்களு டை­யதா என்று கேட்­ட­போது ஒவ்­வொரு சொல்­லாக யோசித்து யோசித்து தமி­ழில் பேசி­னார்.

அந்த மாது ஆந்­தி­ரா­வைச் சேர்ந்­த­வர் என்­ப­தும் வாத்­து­ முட்டைகளை விற்று பணம் சம்­பா­திப்­ப­தற்­காக தமிழ்­நாடு வந்­தி­ருக்­கி­றார் என்­பதும் பின்­னர் தெரிந்­தது.

"தமிழ்­நாடு எப்­போது வந்­த­தாலும் எங்­களை வர­வேற்று உதவி உப­ச­ரிக்­கிறது. நாங்கள் வளர்க்­கும் வாத்து எங்­களை வாழ வைக்கிறது," என்று அவர் சொன்னதை அந்த மாதின் கணவரின் சகோதரரான திரு ராமா, 38, என்பவரின் உதவி யுடன் புரிந்துகொண்டேன்.

"ஆயி­ரம் வாத்­து­க­ளு­டன் வந்­துள்­ளோம். இன்­னும் ஓரிரு மாதங்கள் தமிழ்­நாட்­டில் டெல்டா பகு­தி­யில் இங்­கும் அங்­கு­மாக இருப்­போம். பிறகு எங்­கள் வாத்து­களு­டன், கையில் ஏறக்­கு­றைய ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை பணத்­து­டன் எங்­கள் ஊருக்­குச் சென்­று­வி­டு­வோம்," என்று கூறிய திரு­மதி தன­லட்­சுமி என்ற அந்த 30 வயது மாதை மயிலாடுதுறை மாவட்­டத்­தில் உள்ள முட்டம் என்ற ஒரு கிரா­மத்­தில் சந்­தித்­தேன்.

காவிரி டெல்டா பகு­தி­யில் பெரும்­பா­லான வயல்­களில் குறுவை அறுவடை முடிந்து அடுத்த நட­வுக்கு ஆயத்த வேலை­கள் நடந்து வரு­கின்­றன.

ஆந்­தி­ரப் பிர­தே­சம் பீமா­ரம் என்ற பகு­தி­யைச் சேர்ந்த திரு வெங்­கண்ணா, 40, திரு­மதி தன­லட்­சுமி தம்­ப­திக்கு வாத்து முட்டை உற்பத்திதான் வாழ்க்கை.

அவர்­க­ளின் சொந்த ஊர் பகுதி­களில் இப்­போது வய­லில் நடவு வேலை நடக்­கிறது. ஆகை­யால் வயல்­களில் வாத்­து­களை மேய்த்து வளர்ப்­பது சிர­மம். வாத்துகளுக்கு நீர்நிலைகள்தான் உயிர்நாடி.

இதன் கார­ண­மாக தங்­க­ளுடைய வாத்­து­க­ளு­டன் வெங்­கண்ணா தம்­ப­தி­யர், அறு­வடை ஆகி நீர்­நிலைகள் நிரம்­பிக் கிடக்கும் தமிழக டெல்டா பகு­திக்கு இந்­தப் பரு­வத்­தில் வரு­கி­றார்­கள்.

அறுவடையாகி இருக்கும் வயல்களில் பகல் நேரத்­தில் வாத்து­களை மேய்க்­கி­றார்­கள். மாலை­யா­ன­ தும் வாத்­து­களை எல்­லாம் ஓட்­டிக்­கொண்டு பட்­டி­யில் அடைத்­து­விடு­கி­றார்­கள். கிரா­மத்தை ஒட்டி உள்ள காலி­யான மேடான பகு­தி­களில் தற்­கா­லிக வேலி­களுடன் கூடிய பட்டியிலேயே தங்கி சமைத்து சாப்­பி­டு­கி­றார்­கள்.

பட்­டி­யில் அதி­காலை­யில் வாத்து­கள் முட்­டை­யி­டும்.

"இரை­யைப் பொறுத்து நாள் ஒன்­றுக்கு 400 முதல் 500 முட்­டை­கள் கிடைக்­கும். வய­லில், வாய்க்­கா­லில் நத்தை, மீன், புழு போன்ற பல­வற்­றை­யும் வாத்­து­கள் சாப்­பிடும்.

"நன்­றாக இரை கிடைத்­தால் அதிக முட்­டை­களை எதிர்­பார்க்­க­லாம். தஞ்­சா­வூ­ரில் இருந்து வரும் வியா­பா­ரி­க­ளி­டம் வாத்து முட்­டை­களை ஒன்று ரூ.4 அல்­லது 5 ரூபாய்க்கு விற்­று­வி­டு­வோம். சரா­சரி­யாக நாள் ஒன்­றுக்கு ரூ. 2,000 கிடைக்­கும்.

"பட்­டி­யில் வாத்­துக்குத் தண்­ணீரு­டன் கலந்து மருந்­தை­யும் தீனி­யாக கொடுத்­து­வி­டு­வோம். இத னால் அவ்­வ­ள­வாக வாத்­து­களை நோய் தாக்­காது," என்று திரு­மதி தன­லட்­சுமி கூறி­னார். அவரின் கணவர் திரு வெங்­கண்ணா, அறு­வ­டை­யான நீர்­நி­லை­கள் நிறைந்த வயல்­வெ­ளி­யைத் தேடி கும்­ப­கோணம் பக்­கம் போயி­ருந்­தார்.

திரு வெங்­கண்­ணா­வின் தம்பி ராமா அப்­போது அந்த மாதுக்குத் துணையாக வாத்­து­களை மேய்த்­துக்கொண்­டி­ருந்­தார்.

வெங்­கண்ணா-தன­லெட்­சு­மி­ தம்பதியின் 8 வயது மக­ன் நாகையா தன் தாயாரு­டன் இருந்­தார்.

தங்கள் இரண்டு புதல்விகளை தங்கள் கிராமத்தில் உறவினர்களிடம் விட்டுவிட்டு இவர்கள் தமிழ்நாடு வந்திருக்கிறார்கள்.

"எங்­க­ளி­டம் வள­ரும் வாத்து ஆண்டு ஒன்­றுக்­குச் சரா­ச­ரி­யாக 200 முதல் 250 முட்­டை­க­ளை­யி­டும். ஒரு வாத்து ஐந்து முதல் 10 ஆண்டு­கள் வரை உயி­ரோடு இருக்­கும்.

"ஏழு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு வாத்தை ரூ.150 முதல் ரூ.200க்கு விற்­று­வி­டு­வோம். வாத்து குஞ்சு ரூ.50க்கு வாங்­கு­கி­றோம்.

"கிட்­டத்­தட்ட ஏழு, எட்டு மாதங்­களில் வாத்து முட்­டை­யி­டத் தயா­ரா­கி­வி­டும். வாத்துகளை வாடகைக் கூண்டு வாகனத்தில் கொண்டு வருவோம், கொண்டு செல்வோம். நாங்­கள் பீமா­ரம் சென்று சேரும்­போது அங்கு அறு­வடை காலம் தொடங்­கி­வி­டும்.

"வயல்­கள் காலி­யா­கி­வி­டும். அங்கு எங்­கள் வாத்­து­களை மேய­விட்டு முட்­டை­க­ளைச் சேக­ரித்து பணம் சம்­பா­தித்து வாழ்க்­கையை ஓட்­டு­கி­றோம்," என்றார் அந்த மாது.

"வாத்து மந்தமான உயிரினம் என்று சொல்லி கிண்டல் செய்வதை நீங்கள் கேட்டு இருக்கலாம்.

"ஆனால் எங்களை வாழ வைப்பது வாத்துதான் என்று அந்த மாது, ஒரு வாத்தை என்னிடம் காட்டியபடி திக்கி திக்கி தமிழில் சொன்னதைக் கேட்டபடியே அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

ஒரு கி.மீ. தொலைவு வந்த பிறகும் குவாக் குவாக் சத்தம் இலேசாக கேட்டபடியே இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!