US$100மி. பணக்காரர்கள்: இந்தியா 3வது இடத்தில்; சீனாவை விஞ்சும்

US$100மி. பணக்காரர்கள்: இந்தியா 3வது இடத்தில்; சீனாவை விஞ்சும்

2 mins read
a283a6ff-869e-4c4e-92ef-a2e6b989ea69
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஏழ்மை, பண­வீக்­கம், பசி பட்­டினி இருந்­தா­லும்­கூட உல­கின் US$100 மில்லியன் பணக்­கா­ரர்­க­ளின் எண் ணிக்கை அந்த நாட்­டில் அதி­கரித்து வரு­வ­தாக புதிய ஆய்­வ­றிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.

உல­க­ள­வில் குறைந்­த­பட்­சம் US$100 மில்­லி­யன் வைத்துள்ள (ரூ.830கோடி) பணக்­கா­ரர்­கள் பட்டி­யலை அந்த ஆய்­வ­றிக்கை முதன்­மு­த­லாக வெளி­யிட்டு இருக்­கிறது.

அத்­த­கைய பணக்­கா­ரர்­கள் உல­கத்­தில் 25,490 பேர் இருக்­கிறார்­கள். இந்­தி­யா­வில் இருப்­பவர்­க­ளின் எண்­ணிக்கை 1,132. பிரிட்­டன், ரஷ்யா, சுவிட்­சர்­லாந்து நாடு­கள் இந்­தி­யா­வுக்கு அடுத்த நிலை­யில் இருக்­கின்­றன.

இப்­போது சீனா இரண்­டா­வது இடத்­தில் இருக்­கிறது. ஆனால், 2032ஆம் ஆண்டு வாக்­கில் இந்தியா இந்த அம்­சத்­தில் சீனாவை விஞ்­சி­வி­டும் என்று ஹென்லே& பார்ட்னர்ஸ் என்ற அனைத்­து­லக முதலீட்டு ஆலோ­சனை நிறு­வ­னம் வெளி­யிட்டு இருக்­கும் அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

இத்­த­கைய பெரும் பணக்­கா­ரர்­க­ளின் எண்­ணிக்கை அடுத்த 10 ஆண்­டு­களில் ஆசி­யா­வில் வேக­மாக அதி­க­ரிக்­கும் என்­றும் அவர்­களில் கிட்­டத்­தட்ட 57 விழுக்­காட்­டி­னர் ஆசி­யா­வைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பார்­கள் என்­றும் அறிக்கை கணிக்­கிறது.

US$100 மில்­லி­யன் பணக்­கா­ரர்­களில் 38 விழுக்­காட்­டி­னர் அதாவது, 9,730 பேர் அமெ­ரிக்­கா­வில் இருக்­கி­றார்­கள். உலக மக்­கள்­தொ­கை­யில் 4% மட்­டுமே அமெ­ரிக்­கா­வில் வசிக்­கி­றார்­கள்.

சீனா­வில் இத்­த­கைய பணக்­கா­ரர்­க­ளின் எண்­ணிக்கை 2,021 ஆகவும் பிரிட்­ட­னில் 968 ஆகவும் இருக்­கிறது. ஜெர்­மனி, சுவிட்­சர்­லாந்து, ஜப்­பான், கனடா, ஆஸ்­தி­ரே­லியா, ரஷ்யா ஆகிய நாடு­கள் முதல் 10 நாடு­கள் பட்­டி­ய­லில் அடுத்­த­டுத்த நிலை­யில் உள்­ளன.

கடந்த 1990களில் US$30 மில்­லி­யன் சொத்தை வைத்து இத்­த­கைய பெரும் பணக்­கா­ரர்­கள் கணக்­கி­டப்­பட்­டார்­கள். இப்­போது அந்­தத் தொகை US$100 மில்­லி­ய­னாக நிர்­ண­யிக்­கப்­பட்­டு உள்­ள­தா­க­ அறிக்கை குறிப்­பிட்­டது.