இட்லி, வடைக்கும் வந்துவிட்டது 'ஏடிஎம்' (காணொளி)

இட்லி, வடைக்கும் வந்துவிட்டது 'ஏடிஎம்' (காணொளி)

1 mins read
48644774-82aa-45ad-96ac-ce425117f27b
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இட்லி, வடை விற்கும் சிறப்பு ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. படம்: மனோரமா ஆன்லைன் -
Google News Preferred Icon

ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக சூடாக இட்லி, வடை பெற்றுக்கொள்ள வேண்டுமா? ஆனால், அதற்கு நீங்கள் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருக்குச் செல்ல வேண்டும்.

அந்நகரிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இட்லி, வடை விற்கும் சிறப்பு ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

'ஃபிரெஷ்ஹாட்' ரொபோட்டிக்ஸ்' எனும் புதிய நிறுவனம் அவ்வியந்திரங்களை நிறுவியுள்ளது. அதிலுள்ள 'கியூஆர்' குறியீட்டை 'ஸ்கேன்' செய்து, விருப்பமான உணவைத் தெரிவுசெய்து, இணையம் வழியாகக் கட்டணம் செலுத்தலாம்.

இதனிடையே, பயனீட்டாளர் தெரிவு செய்த உணவை அந்த இயந்திரம் உணவைச் சமைக்கத் தொடங்கிவிடும். சில நிமிடங்களில் 'பேக்' செய்யப்பட்ட உணவு விநியோகிக்கப்படும்.

அடுத்த மாத இறுதிக்குள் நகரின் மேலும் பல இடங்களில் இந்த இயந்திரங்களை நிறுவ 'ஃபிரெட்ஷாட் ரொபோட்டிக்ஸ்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்