75,000 பேருக்கு வேலை நியமனக் கடிதங்கள்

75,000 பேருக்கு வேலை நியமனக் கடிதங்கள்

2 mins read
6c310c52-b55a-4ff6-9253-8e05d95d0b42
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் நோக்­கில் வேலைவாய்ப்புத் திருவிழா எனும் ஆள்­சேர்ப்பு முயற்­சியை அந்­நாட்­டுப் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று தொடங்­கி­வைத்­தார்.

இளை­யர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு வழங்­கும் இலக்கு கொண்­டுள்ள இந்த முயற்­சி­யின் முதல்­கட்­ட­மாக 75,000 பேருக்கு நேற்று வேலை நிய­ம­னக் கடி­தங்­கள் வழங்­கப்­பட்­டன. விழா­வில் கலந்­து­கொண்டு பேசிய திரு மோடி, கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட சீர்­தி­ருத்­தங்­கள் கார­ண­மாக உல­கின் ஐந்­தா­வது ஆகப் பெரிய பொரு­ளி­ய­லாக இந்­தியா உயர்ந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

"கடந்த 100 ஆண்­டு­கள் இல்­லாத மிகப் பெரிய உல­க­ளா­விய பொரு­ளியல் நெருக்­கு­த­லின் விளை­வாக பெரிய பொரு­ளி­ய­லைக் கொண்­டுள்ள பல நாடு­கள் பண­வீக்­கம், வேலை­யின்மை போன்ற பிரச்­சி­னை­க­ளால் சிர­மப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய சவால் வெறும் 100 நாள்­களில் மறைந்­து­விட வாய்ப்­பில்லை," என்­றார் திரு மோடி.

வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகு­தி­யாக இந்­தி­யா­வில் வெவ்­வேறு இடங்­களில் ஏறத்­தாழ 20,000 பேருக்கு 50 மத்­திய அமைச்­சர்­கள் வேலை நிய­ம­னக் கடி­தங்­களை வழங்­கி­னர்.

ராஜஸ்­தான் தலை­ந­கர் ஜெய்ப்­பூ­ரில் ரயில்­துறை அமைச்­சர் அஷ்­வினி வைஷ்­ணவ் வேலை நிய­ம­னக் கடி­தங்­களை வழங்­கி­னார்.

சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்­தி­யப் பிர­தே­சத்­தின் போபா­லி­லும் ஒளி­ப­ரப்பு அமைச்­சர் அனு­ராக் தாகூர் சண்­டி­க­ரி­லும் வேலை நிய­ம­னக் கடி­தங்­களை வழங்­கி­ய­தாக இந்­திய ஊட­கம் தெரி­வித்­தது.

வேலை நிய­ம­னக் கடி­தங்­கள் பெறு­ப­வர்­கள் இந்­தி­யா­வின் வெவ்­வேறு பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

அவர்­கள் 38 மத்­திய அமைச்­சு­கள், மத்­திய அர­சின் துறை­களில் வேலை­யில் சேரு­வர்.

இந்­திய ஆயு­தப் படை அதி­காரி, காவல்­து­றை­யில் உதவி ஆய்­வா­ளர், வரு­மான வரி ஆய்­வா­ளர் போன்ற பணி­களில் அவர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர். இளை­யர்­க­ளுக்­காக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த வேலை வாய்ப்பு முயற்­சிக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.