அயோத்தியில் இன்று தீப விழா; ஒளிவீசும் 1.5 மி. தீபங்கள்

அயோத்தியில் இன்று தீப விழா; ஒளிவீசும் 1.5 மி. தீபங்கள்

1 mins read
ee77c223-d0c5-4859-8c80-0d5176547ec7
-

புது­டெல்லி: தீபா­வ­ளியை முன்­னிட்டு உத்­தரப் பிர­தே­சத்­தில் உள்ள அயோத்தி நக­ரில் 1.5 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தீபங்­கள் ஏற்­றப்­பட்டு வழி­பாடு நடத்த ஏற்­பாடு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அயோத்­தி­யில் பிர­ம்மாண்ட தீப விழா நடந்து வரு­கிறது.

சரயு ஆற்­றங்­க­ரை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான தீபங்­களை ஏற்றி வழி­படும் இந்த நிகழ்ச்சி ஆறா­வது முறை­யாக இந்த ஆண்­டும் நடக்­கிறது.

இந்த பிர­ம்மாண்ட தீப விழாவை பிர­த­மர் மோடி இந்­திய நேரப்­படி இன்று மாலை­ தொ­டங்கி வைக்­கி­றார்.

அதை­ய­டுத்து, சரயு ஆற்­றங்

கரை­யில் ஆரத்தி வழி­பாட்­டி­லும் அவர் பங்­கேற்க இருக்­கி­றார்.

அதற்கு முன்பு திரு மோடி அயோத்­தி­யில் சாமி தரி­ச­னம் செய்ய இருக்­கி­றார்.

அங்­குள்ள ராமர் கோயி­லில் சிறப்பு பூஜை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன் ராமர் ேகாயில்

கட்­டு­மானப் பணி­களை திரு மோடி ஆய்வு செய்­வார் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இன்று நடை­பெ­றும் விழா­வில் 11 ராம்­லீலா அலங்­கார ஊர்­தி­கள், அனி­மே­ஷன் ஊர்­தி­கள் போன்­றவை காட்­சிப்­ப­டுத்­தப்­பட உள்­ளன.

அத்­து­டன் பல்­வேறு மாநி­லங்­

க­ளைச் சேர்ந்த கலை­ஞர்­க­ளின்

நட­னம் உள்­ளிட்ட கலை நிகழ்ச்­சி ­களும் நடை­பெ­று­கின்­றன.

அயோத்தி தீப விழா நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் மோடி முதல்­மு­றை­யா­கப் பங்­கேற்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தீப விழாவை முன்­னிட்டு அயோத்­தி­யில் பாது­காப்­புப் பணி­களை உத்­த­ரப் பிர­தேச காவல்­

து­றை­யி­னர் முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.