கட்டண வசூலில் முறைகேடு; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கட்டண வசூலில் முறைகேடு; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

1 mins read
36c328b4-5bd2-4cc9-98e8-1ff93dc2341d
-

புது­டெல்லி: டெல்லி மாந­க­ராட்­சி­யில் வாகன நிறுத்­து­மி­டக்

கட்­டண வசூ­லில் நடை­பெற்ற முறை­கேடு கார­ண­மாக வரு­வாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக ஆம் ஆத்மி கட்சி குற்­றம் சாட்­டி­யுள்­ளது. இது­கு­றித்து ஆம்­ஆத்மி மாந­க­ராட்சி பொறுப்­பா­ளர் துர்­கேஷ் பதக் கூறு­கை­யில்,

"டெல்லி மாந­க­ராட்­சி­யில் பாஜக ஆட்­சி­யின்­போது, வாகன நிறுத்­து­மி­டக் கட்­ட­ணத்தை வசூ­லிக்க ஏலக்­குத்­தகை மூலம் நிறு­வ­னம் ஒன்று தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது. அப்­போது மக்­க­ளி­ட­மி­ருந்து அந்த நிறு­வ­னம் கிட்­டத்­தட்ட 1.5 கோடி ரூபாய் கட்­ட­ண­மாக வசூ­லித்­தது. ஆனால் வசூ­லிக்­கப்­பட்ட தொகை மாந­க­ராட்­சிக்கு வந்து சேர­வில்லை. அந்த நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர்­கள் மாந­க­ராட்­சியை ஏமாற்­று­வ­தற்­காக வேறு பல நிறு­வ­னங்­களைத் தொடங்­கி­னார்­கள். இதன் கார­ண­மாக மாந­க­ராட்­சிக்கு ஏறத்­தாழ ரூ.6 கோடி நட்­டம் ஏற்­பட்­டது. இது தொடர்­பாக நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டும் நிறு­வ­னங்­கள் பணத்தை மாந­க­ராட்­சிக்­குத் திருப்பித் தர­வில்லை. இந்த விவ­கா­ரம் குறித்து லெஃப்டி­னன்ட் கவர்­னர் விசா­ரிக்க வேண்­டும்," என ஆம் ஆத்மி மாந­க­ராட்சிப் பொறுப்­பா­ளர் துர்­கேஷ் பதக் கூறி­னார்.

இந்­நி­லை­யில், டெல்லி மாந­க­ராட்சி இந்த குற்­றச்­சாட்­டு­களை மறுத்­துள்­ளது. டெல்லி மாந­க­ராட்சி தனது வாகன நிறுத்­து­

மி­டங்­களை வணி­க­ரீ­தி­யாக செயல்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது. மேலும் ஒப்­பந்­தத்­தின் விதி­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யில் உரி­மத்­திற்­கான கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் 6 கோடி ரூபாய் வழங்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு ஆதா­ர­மற்­றது என்­றும் அது தெரி­வித்­துள்­ளது. டெல்லி மாந­க­ராட்­சிக்கு வரு­கிற டிசம்­பர் மாதம் தேர்­தல் நடை­பெற

உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.