பட்டாசுக் கடை தீ விபத்தில் இருவர் பலி

பட்டாசுக் கடை தீ விபத்தில் இருவர் பலி

1 mins read
bb2d9379-4f8f-4131-a340-c0c447d855c8
-

விஜயவாடா: ஆந்­திர மாநி­லம், சித்­தூர் அடுத்த வட மாலா­பேட்டை அருகே உள்ள நாரா­ய­ண­தாஸ் சோட்டா என்ற இடத்­தில் தீபா­வளி பண்­டி­கை­யை­யொட்டி பட்­டாசுக் கடை­கள் அமைக்­கப்­பட்­டன.

அவற்­றில் கோடிக்­க­ணக்­கான ரூபாய் மதிப்­பி­லான பட்­டா­சு­கள் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்டு இருந்­தன. தீபா­வ­ளியை முன்­னிட்டு பட்­டா­சுக் கடை­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்­கள் திரண்­ட­னர்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் இரவு கடை­யில் பட்­டாசு வாங்­கிய சிறு­வன் ஒரு­வன், கடைக்கு முன்­பாக பெரிய சர­வெ­டியைக் கொளுத்­தி­னான். சர­வெடி வெடித்து சிதறி பட்­டாசுக் கடைக்­குள் விழுந்­தது. அப்­போது கடை­யில் விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த பட்­டா­சில் தீப்பற்றி வெடித்­த­தால் அங்கு அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த பட்­டா­சு­க­ளுக்­குத் தீ பர­வி­யது.

இத­னைக் கண்ட கடை ஊழி­யர்­கள் மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­கள் அலறி அடித்­துக்கொண்டு ஓட்­டம் பிடித்­த­னர். தீய­ணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்­த­னர். கடை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த கோடிக்­க­ணக்­கான பட்­டா­சு­கள் எரிந்து நாச­மா­கின.

இதற்கிடையே, விஜ­ய­வாடாவிலும் தீபா­வளி பண்­டி­கை­யை­யொட்டி தற்­கா­லி­க­மாக 18 பட்­டாசுக் கடை­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. அங்­குள்ள பட்­டாசுக் கடை­யில் திடீ­ரென தீ விபத்து ஏற்­பட்­டது. மேலும் 3 கடை­க­ளுக்குத் தீ

பர­வி­யது. கடை­யில் இருந்த பட்­டா­சு­கள் பயங்­கர சத்­தத்­து­டன் வெடித்துச் சித­றி­ன. இதில்

பட்­டாசுக் கடை­யில் வேலை செய்த இருவர் உடல் சிதறி சம்­பவ இடத்­தி­லேயே இறந்தனர்.