புதுடெல்லி: வெளிநாடுகளி
லிருந்து நிதிபெறுவது தொடர்பான விதிமுறைகளை ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய மூன்று அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து நிதிபெறுவது தொடர்பான விதிமுறைகளை ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீறியதாகக் கூறி அதன் உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி, உறுப்பினராக முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

