ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா; மிரட்டப்பட்ட தம்பதியர்

1 mins read
61930299-51ec-4eb7-9d90-fd5bd627e00c
-

நொய்டா: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் நொய்டா நக­ரில் உள்ள ஹோட்­டல் ஒன்­றில் பல ரக­சிய கேம­ராக்­களை ஒளித்­து­வைத்து அறை­யில் தங்­கிய தம்­ப­தி­ய­ரின் அந்­த­ரங்க காட்­சி­களை எடுத்து பிறகு அவர்­க­ளி­டம் பணம் கேட்டு மிரட்­டிய இரண்டு ஆட­வர்­களைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

விஷ்ணு சிங், அப்­துல் வஹாப் ஆகிய இரு­வ­ரும் முத­லில் அந்த ஹோட்­டல் அறை­யில் தங்­கி­னர். அப்­போது அங்கு பல ரக­சிய கேம­ராக்­க­ளைப் பொருத்­தி­னர். அவர்­கள் அங்­கி­ருந்து சென்­ற­தும் அதே அறை­யில் கண­வன்-மனைவி தங்­கி­னர்.

அவர்­கள் தனி­மை­யில் இருக்­கும் காட்­சி­கள் ரக­சிய கேம­ராக்­களில் பதி­வா­கின. தம்­பதி­யர் ஹோட்­டல் அறையை விட்­டுச் சென்­ற­தும் கிட்­டத்­தட்ட ஒரு வாரம் கழித்து, விஷ்ணு சிங்­கும் அப்­துல் வஹாப்­பும் அதே அறையை வாட­கைக்கு எடுத்­த­னர். அங்கு தாங்­கள் ரக­சி­ய­மாக பொருத்­திய கேம­ராக்­களை எடுத்­துச்­சென்­ற­னர். கேம­ரா­வில் பதி­வான அந்த தம்­ப­தி­யின் தனிமை வீடியோ காட்­சி­க­ளைக் கைப்­பற்றி அந்த தம்­ப­தியை கைத்­தொ­லை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு பணம் கேட்டு மிரட்­டி­னர். பணம் தர­வில்­லை­யென்­றால் தனி­மை­யில் இருக்­கும் காணொ­ளி­கள் இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­படும் என்று அவர்­கள் மிரட்­டி­னர்.

இது­கு­றித்து அந்­தத் தம்­ப­தி­யர் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­த­னர். விஷ்ணு சிங்­கை­யும் அப்­துல் வஹாப்­பை­யும் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர். இந்­தச் சம்­ப­வத்­து­டன் ஹோட்­டல் ஊழி­யர்­க­ளுக்­குத் தொடர்பு இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.