‘நிர்வாகப் பதவிகளில் இருப்போர் செய்யும் குற்றங்களால் பேரிழப்பு’

மும்பை: மராட்­டிய மாநில முன்­னாள் உள்­துறை அமைச்­சர் அனில் தேஷ்­முக் மும்­பை­யில் உள்ள ஹோட்­டல், பார் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் ரூ.100 கோடி லஞ்­சம் கேட்ட வழக்­கில் கடந்த ஆண்டு நவம்­பர் 2ஆம் தேதி கைது செய்­யப்­பட்­டார். தற்­போது அவர் நீதி­மன்ற காவ­லில் உள்­ளார்.

இந்­நி­லை­யில், அவர் பிணை­யில் வெளி­வர மும்­பை­யில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்து இருந்­தார்.

அவ­ரது பிணை மனுவை சிபிஐ நீதி­மன்­றம் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று நிரா­க­ரித்­தது.

நீதி­மன்ற உத்­த­ர­வின் முழு விவ­ரம் நேற்று முன்­தி­னம் வெளி­யா­னது.

அதில் அனில் தேஷ்­முக்­கின் பிணை மனுவை நிரா­க­ரித்­த­தற்­கான கார­ணங்­களை சிபிஐ நீதி­மன்­றம் குறிப்­பட்­டது.

"இந்த வழக்­கில் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைப் பாதிக்­கும் வகை­யில் பெரிய அள­வி­லான பணம் சம்­பந்­தப்­பட்டு இருப்­பது தெரி­கிறது. இது­போன்ற 'ஒயிட் காலர்' குற்­றங்­கள் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைப் பாதிக்­கிறது. எனவே, இது­போன்ற குற்­றங்­கள் மிகக் கடு­மை­யா­னவை என எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

"மாநி­லத்­தின் பொரு­ளா­தா­ரத்­தைச் சிதைக்­கும் பொரு­ளா­தா­ரக் குற்­ற­வா­ளி­கள், சட்­டத்­தின் முன் கொண்டு வரப்­ப­ட­வில்லை எனில் அது ஒட்டு மொத்த நாட்­டை­யும் சீர்­கு­லைத்­து­வி­டும்.

"உணர்ச்­சி­வ­சப்­படும் நேரத்­தில் நொடிப் பொழு­தில் கொலைக் குற்­றங்­கள் நடக்­கின்­றன. ஆனால் பொரு­ளா­தாரக் குற்­றங்­கள் சமூ­கத்­துக்கு ஏற்­படும் விளை­வு­களைப் பொருட்­ப­டுத்­தா­மல், தனி­ந­ப­ரின் லாபத்தை மட்டும் கருத்­தில் கொண்டு திட்­ட­மிட்டு செய்­யப்­

ப­டு­கிறது," என்று சிபிஐ நீதிமன்றம் வெளியிட்ட பிணை நிராகரிப்பு உத்தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!