திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும்பாவூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான எல்தவுஸ் குன்னப்பிள்ளி பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதே இதற்குக் காரணம்.
நேற்று முன்தினம் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எல்தவுஸ் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் அவரை இடைநீக்கம் செய்ததாக கேரள சட்டமன்றம் கூறியது.

