கர்நாடக சட்டமன்றத் துணை சபாநாயகர் காலமானார்

கர்நாடக சட்டமன்றத் துணை சபாநாயகர் காலமானார்

1 mins read
155243e5-461f-45e7-9f2d-e6b9ae752a1a
-

பெங்­க­ளூரு: பாஜக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் கர்­நா­டக சட்­ட­

மன்­றத் துணை சபா­நா­ய­க­ரு­மான ஆனந்த் மாமணி உடல்­ந­லக்­

கு­றை­வால் தனி­யார் மருத்­து­வ­

ம­னை­யில் கால­மா­னார்.

அவ­ருக்கு வயது 56.

ஆனந்த் மாமணி, சவு­தாட்டி சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக மூன்று முறை பதவி வகித்­த­வர். இவ­ருக்கு ஒரு மக­னும் ஒரு மகளும் உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, மருத்­து­வ­ம­னைக்கு நேரில் சென்று ஆனந்த் மாம­ணி­யின் உட­லுக்கு அஞ்­சலி செலுத்­தி­னார்.

"எங்­கள் கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் மாநில சட்­ட­மன்­றத் துணை சபா­நா­ய­க­ரு­மான ஆனந்த் சந்­தி­ர­சே­கர் மாம­ணி­யின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்­தம் அடைந்­தேன்.

"அவ­ரது ஆன்மா சாந்தி அடைய இறை­வ­னி­டம் வேண்­டு­கி­றேன். அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு ஆனந்த் மாம­ணி­யின் இழப்பை தாங்­கும் சக்­தியை கட­வுள் வழங்­கட்­டும்," என்று திரு பச­வ­ராஜ் பொம்மை டுவிட்­ட­ரில் பதி­விட்­டார். ஆனந்த் மாம­ணி­யின் தந்தை சந்­தி­ர­சே­கர் மாம­ணி­யும் 1990களில் துணை சபா­நா­ய­க­ரா­கப் பதவி வகித்தவர்.