ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் உள்ள சிப்சிப்பி கிராமத்தில் சுகாதார மையம் ஒன்றில் தாதி ஒருவர் இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 3 மணியளவில் தனியாகப் பணி
புரிந்துகொண்டிருந்தார்.
இதனை அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது, கவனித்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் மையத்துக்குள் புகுந்து அந்தத் தாதியைக் கட்டிப்போட்டுள்ளனர்.
அதன்பின், அவரது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு, பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பிறகு ஒருவழியாக வீட்டுக்குச் சென்ற தாதி, சம்பவம் குறித்து தமது பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
தாதியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்த சத்தீஷ்கர் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கம் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தூரமாக, ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் பணிபுரியமாட்டோம் எனச் சுகாதார பணியாளர்களில் ஒரு பிரிவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தாதியரைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மூவரை காவல்
துறையினர் கைது செய்தனர்.
தப்பியோடிய ஒருவரை காவல்துறையினர் வலைவீசித் தேடுகின்றனர்.

