கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் ஃபதேப்பூர் பகுதியருகே ராம்வான் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் ஒன்று நேற்று காலை சென்றுகொண்டு இருந்தது.
திடீரென அந்த ரயிலின் ஏழு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகின. இந்தச் சம்பவம் காரணமாக டெல்லியிலிருந்து ஹவுரா செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

