காயமடைந்த சிறுமிக்கு உதவாமல் காணொளி எடுத்த கூட்டம்

காயமடைந்த சிறுமிக்கு உதவாமல் காணொளி எடுத்த கூட்டம்

1 mins read
957cb2ec-0941-4a6e-a4d3-537187adbfe9
படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

கடுமையாகக் காயமடைந்த சிறுமிக்கு உதவி செய்யாமல் அவள் வலியில் துடித்துக்கொண்டிருந்ததை காணொளி எடுத்தது அவளை சுற்றியிருந்த கூட்டம். இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இந்த அவலமான சம்பவம் நடந்ததுள்ளது.

சிறுமிக்கு உடல் முழுதும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவள் உதவிக்காக சைகை செய்தும் அவளுக்கு உதவி செய்ய கூட்டத்தில் யாரும் முன்வரவில்லை. சிறுமியை சுற்றி பல ஆடவர்கள் நின்றுகொண்டிருந்தனர். உதவி செய்யாமல், சிறுமி வலியால் அவதியுறுவதை அவர்கள் காணொளி எடுத்தனர். காவல்துறையை அழைப்பது பற்றி சிலர் பேசுவது காணொளியில் பதிவுசெய்யப்பட்டது. இருப்பினும், அவளுக்கு எவரும் உதவி செய்யவில்லை.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு காணொளியில் காவல்துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை தூக்கிச்செல்வது தெரிந்தது.

சிறுமிக்குத் தலையில் பலத்த காயம் உட்பட உடலில் பல இடங்களில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அவள் பாலியல் வன்செயலுக்கு ஆளாகியிருக்கலாம் எனக் காவல்துறை நம்புகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 13 வயதான அச்சிறுமி பொருள்கள் வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். ஆடவர் ஒருவருடன் அவள் நடந்துவருவது கண்காணிப்புக் கேமிராவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு புதருக்கு அருகே சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவளுடன் பேசிக்கொண்டிருந்த ஆடவரை காவல்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.