பட்டாசுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆடவரைக் குத்திக்கொன்ற சிறுவன்

பட்டாசுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆடவரைக் குத்திக்கொன்ற சிறுவன்

1 mins read

இந்தியாவின் மும்பையில் பட்டாசு வெடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆடவர் ஒருவரை 15 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொன்றுள்ளான். இச்சம்பவத்தின் தொடர்பில் 14, 15 வயது சிறுவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 வயது சிறுவன் ஒருவன் காவல்துறையால் தேடப்பட்டு வருகிறான்.

இந்த மூன்று சிறுவர்களும் கண்ணாடி போத்தலுக்குள் பட்டாசை போட்டு வெடித்துக்கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த சுனில் நாயுடு என்பவர் அவ்வாறு செய்யவேண்டாம் என்று சிறுவர்களை அறிவுறுத்தியுள்ளார். இது வாக்குவாதமாகி நால்வரிடையே கைகலப்பு மூண்டது.

இந்நிலையில், 15 வயது சிறுவன் கத்தியால் சுனிலை குத்தினான். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் பல நகரங்களில் தீபாவளிக்காக பட்டாசு வெடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பலர் பட்டாசு வெடித்துவருகின்றன.