உலகின் ஆக அதிக காற்று மாசு உள்ள நகரம் டெல்லி

உலகின் ஆக அதிக காற்று மாசு உள்ள நகரம் டெல்லி

2 mins read
5bd1dca5-67e2-4aee-a273-6a9b8a5c855e
-

தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்துத் தீர்த்த பொதுமக்கள்

புது­டெல்லி: தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்­தின்­போது தடையை மீறி பொது மக்­கள் பட்­டா­சு­களை வெடித்­த­தால் டெல்­லி­யில் காற்­றின் தரம் வெகு­வா­கக் குறைந்­தது.

உலக காற்­றுத் தர குறி­யீடு அமைப்பு ஆசி­யா­வில் உள்ள அதிக மாச­டைந்த நக­ரங்­கள் பற்றி ஆய்வு செய்து பட்­டி­யல் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

அதில் பத்து நக­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்­றுள் எட்டு நக­ரங்­கள் இந்­தி­யா­வில் உள்­ளன. மேலும், காற்று மாசு­பாடு அதி­க­முள்ள நாடு­க­ளின் வரி­சை­யில் கட்டாருக்கு அடுத்து இந்­தியா இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், தீபா­வ­ளி­யன்று சுவிட்­சர்­லாந்து நாட்­டின் காற்­றுத் தர குறி­யீடு அமைப்பு மேலும் ஒரு புதிய பட்­டி­யலை வெளி­யிட்­டது. அதன்­படி, உலக அள­வில் காற்­றின் தரம் மோச­மாக உள்­ள நக­ரங்­களில் டெல்லி முத­லி­டம் பிடித்­துள்­ளது.

பாகிஸ்­தா­னின் லாகூர் நக­ரம் இரண்­டாம் இடத்­தில் உள்­ளது என்­றும் தொழிற்­சா­லை­கள், வாகன புகை, கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் உள்­ளிட்ட பல்­வேறு கார­ணி­க­ளால் காற்று அதிக அள­வில் மாச­டைந்து வரு­வ­தா­க­வும் சுவிட்­சர்­லாந்து அமைப்பு தெரி­வித்­தது.

தீபா­வ­ளி­யன்று விடி­யற்­காலையே பொது­மக்­கள் பட்­டா­சு­களை வெடிக்­கத் தொடங்­கி­விட்­ட­னர். இத­னால் காலை ஆறு மணிக்கே டெல்­லி­யில் காற்­றின் தரம் மோசமடைந்து 323 புள்­ளி­களா­கப் பதி­வா­னது. அதே சம­யம் ஒப்­பீட்டு அள­வில் கடந்த நான்கு ஆண்­டு­களில் தீபா­வளி சம­யத்­தில் பதி­வா­ன­தை­விட, இந்த ஆண்டு காற்று மாசு பாதிப்பு குறை­வு­தான் என்று மத்­திய மாசுக் கட்­டுப்­பாட்டு வாரி­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

பொது­வாக காற்­றின் தரக் குறி­யீடு 50 புள்­ளி­க­ளுக்­குள் இருந்­தால் தர­மான காற்று எனக் கரு­தப்­படு­கிறது. 301 முதல் 400 வரை இருந்­தால் மிக­வும் மோச­மான தரம், 401 முதல் 500 என்­றி­ருந்­தால் அபா­ய­க­ர­மா­னது என நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

காற்று மாசு அதி­க­ரித்து வரு­வ­தால் அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் தேதி வரை அனைத்து வகை­யான பட்­டா­சு­களை விற்­க­வும் வெடிக்­க­வும் டெல்லி மாநில அரசு ஏற்­கெ­னவே தடை­வி­தித்­துள்­ளது. இதை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட மனு தள்­ளு­ப­டி­யா­னது.

எனி­னும், கொரோனா நெருக்­க­டிக்­குப் பிறகு அச்­ச­மின்றி தீபா­வ­ளிப் பண்­டி­கை­யைக் கொண்­டா­டிய டெல்லி மக்­கள், பட்­டா­சு­களை வெடிப்­ப­தி­லும் குறை­வைக்­க­வில்லை. தடையை மீறி ஏரா­ள­மா­னோர் பட்­டா­சு­களை வெடித்­துத் தீர்த்­த­னர்.

தீபா­வளி கொண்­டா­டப்­படும் அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் தான் பஞ்­சாப், ஹரி­யானா மாநி­லங்­களில் பயிர்க்­க­ழி­வு­கள் எரிக்­கப்­ப­டு­கின்­றன. இது­வும் காற்று மாசுக்கு முக்­கிய கார­ண­மாக உள்­ளது.

இதற்­கி­டையே, கடந்த தீபா­வ­ளித் தினத்­தன்று மட்­டும் டெல்­லி­யில் தீ விபத்து சம்­ப­வங்­கள் தொடர்­பாக தீய­ணைப்­புத் துறைக்கு 201 தொலை­பேசி அழைப்­பு­கள் வந்­துள்­ளன.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய டெல்லி தீய­ணைப்புத் துறை இயக்­கு­நர் அதுல் கார்க், நெருக்­கடி நிறைந்த பகு­தி­களில் தீ விபத்துச் சம்­ப­வங்­களைக் கட்டுப்­ப­டுத்த தீய­ணைப்பு வீரர்­கள் குவிக்­கப்­பட்டு இருந்­த­தா­க­வும் அத­னால் பெரிய அசம்­பா­வி­தங்­கள் தவிர்க்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.