கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டது இந்திய படை

கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டது இந்திய படை

1 mins read
0424137a-7b1b-4f4b-986d-9109614f6558
-

புது­டெல்லி: சிட்­ராங் சூறா­வ­ளித் தாக்­கு­த­லால் பங்­ளா­தேஷ் மீன­வர்­கள் சென்ற மீன்­பி­டிப் படகு ஒன்று நடுக்­க­ட­லில் கவிழ்ந்து விபத்­துக்கு உள்­ளா­னது.

இதில் பட­கில் இருந்த 20 மீன­வர்­கள் கட­லில் தத்­த­ளித்­த­னர். இதன்­பின்­னர், கட­லில் மிதந்த கட்டை ஒன்­றைப் பிடித்­துக்­கொண்டு உத­விக்­காக வெகு­நே­ரம் கட­லில் தத்­த­ளித்­த­னர்.

இந்த நிலை­யில், அந்த வழியே இந்­திய கட­லோ­ரக் காவல் படை­யின் விமா­னம் ஒன்று சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்டு இருந்­தது. இதில், நடுக்­க­ட­லில் தத்­த­ளித்­துக் கொண்­டி­ருந்த வங்­கா­ள­தேச மீன­வர்­களை இந்­திய படை வீரர்­கள் கவ­னித்­த­னர்.

இத­னைத் தொடர்ந்து உட­ன­டி­யாக மீட்­புப் பணி­யில் ஈடு­பட்டு மீன­வர்­கள் அனை­வ­ரை­யும் உயி­ரு­டன் மீட்டு வங்­காள தேசத்­தி­டம் ஒப்­ப­டைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர்.