தனது மனைவி தூக்குமாட்டிக் கொள்ளும்போது அவரைத் தடுக்காமல் அதை காணொளியாக பதிவுசெய்துள்ளார் ஆடவர் ஒருவர். மனைவி மாண்டதைத் தொடர்ந்து அந்தக் காணொளியை மனைவியின் குடும்பத்துடன் அவர் பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் கான்பூர் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது.
சோபித்தா குப்தா என்ற மாண்ட பெண்ணுக்கும் அவரது கணவர் சஞ்சய் குப்தாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதனைத் தொடர்ந்து சோபித்தா தூக்குமாட்டிக் கொள்ள தனது கழுத்தைச் சுற்றி துணி ஒன்றை கட்டிக்கொண்டார். அதை அறையில் இருந்து காற்றாடியில் இணைத்துகொண்டார். இதை பார்த்துகொண்டிருந்த அவரது கணவர் சோபித்தாவை தடுக்க முயலவில்லை. அதற்கு மாறாக அந்தக் காட்சியை அவர் காணொளியாக பதிவுசெய்தார்.
இந்த சம்பவம் குறித்து சோபித்தாவின் குடும்பம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. தங்கள் மகளுடைய உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால் சஞ்சய் எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் கூறினர்.
சஞ்சய் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது.

