புதுடெல்லி: உக்ரேனில் போர் தீவிரம் அடைந்து வருவதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. எனவே இந்தியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என தூதரகம் ஓர் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நடக்கும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"உக்ரேனில் இன்னும் தங்கிஉள்ள இந்தியர்கள் எந்தெந்த வழிகளில் வாய்ப்புகள் உள்ளனவோ, அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு வெளியேற வேண்டும்.
"இது தொடர்பாக உதவிகள் தேவைப்பட்டால், இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்," என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதிதான் இந்திய தூதரகம் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், ஒரு வாரத்துக்குள் இரண்டாவது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

