கேரள முதல்வர், ஆளுநர் உச்சக்கட்ட மோதல்

கேரள முதல்வர், ஆளுநர் உச்சக்கட்ட மோதல்

1 mins read
06603e87-a0ad-4867-81cd-906b191d5b5a
-

திரு­வ­னந்­த­புரம்: கேரள நிதி­ய­மைச்­சர் தன்­னைப் பற்றி தரக்­கு­றை­வாக விமர்­சித்­துள்­ளார் என்­றும் அவரை உட­ன­டி­யாக பதவி நீக்­கம் செய்ய வேண்­டும் என்­றும் அம்­மா­நில ஆளு­நர் ஆரிப் முகம்­மது கான் வலி­யு­றுத்தி உள்­ளார்.

எனி­னும், இந்த கோரிக்­கையை முதல்­வர் பின­ராயி விஜ­யன் ஏற்க மறுத்­து­விட்­டார்.

இத­னால் ஆளும் தரப்­புக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடை­யே­யான மோதல் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ள­தாக அர­சி­யல் பார்வை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய கேரள நிதி­ய­மைச்­சர் பால­கோ­பால், ஆளு­நர் ஆரிப் முகம்­மது கானை மறை­மு­க­மாக விமர்­சித்­தார்.

"உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் இருந்து வந்­த­வர்­க­ளுக்கு கேர­ளா­வின் அருமை தெரி­யாது," என்று அமைச்­சர் தமது பேச்­சில் குறிப்­பிட்­டார்.

இத­னால் கோப­ம­டைந்­துள்ள ஆளு­நர், தம்மை மட்­டு­மல்­லா­மல் நாட்­டை­யும் அவ­ம­திக்­கும் வகை­யில் அமைச்­சர் பால­கோ­பால் பேசி வரு­வ­தா­க­வும் அவரை உட­ன­டி­யாக பத­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் என்­றும் முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்குப் பதில் கடி­தம் அனுப்­பி­யுள்ள கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன், அமைச்­சர் தவ­றாக ஏதும் பேச­வில்லை என்­றும் அவரை பதவி நீக்­கம் செய்ய வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றும் குறிப்­பிட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

ஏற்­கெ­னவே பல்­க­லைக்­கழகத் துணை வேந்­தர் நிய­ம­னம் தொடர்­பாக கேரள அர­சுக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடையே கருத்து வேறு­பாடு நிலவி வரு­கிறது.