ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கொடுஞ்செயல்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கொடுஞ்செயல்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

2 mins read
0304fdad-a085-43ef-a9d4-03e36f01e426
இந்தியாவின் 76-வது காலாட்­படை தினத்தை முன்­னிட்டு காஷ்­மீ­ரின் ஸ்ரீந­க­ரில் நேற்று முன்­தி­னம் ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்ச்­சி­யில் இந்திய பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் கலந்துகொண்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களிடம் உரையாடினார். படம்: ஏஎஃப்பி -

ஸ்ரீந­கர்: இந்­திய ராணு­வம் தனது, 76-வது காலாட்­படை தினத்தை முன்­னிட்டு காஷ்­மீ­ரின் ஸ்ரீந­க­ரில் நேற்று முன்­தி­னம் ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்ச்­சி­யில் பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

அப்­போது அவர், பாகிஸ்­தா­னின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் காஷ்­மீ­ரில் மக்­க­ளுக்கு எதி­ரான கொடுஞ்செயல்களில் பாகிஸ்­தான் ஈடு­பட்டு வரு­கிறது. இதற்­கான பதி­ல­டியை அந்­நாடு சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும். இந்­தி­யா­வைக் குறி­வைத்­துத் தாக்­கு­வதே தீவி­ர­வா­தி­க­ளின் ஒரே நோக்­க­மாக உள்­ளது.

அர­சி­ய­லைப்­புச் சட்­டத்­தின் 370-வது பிரிவை அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்­கி­ய­தன் மூலம் ஜம்மு காஷ்­மீ­ரில் மக்­க­ளுக்கு எதி­ரான பாகு­பாடு முடி­வுக்கு வந்­துள்­ளது என்று ராஜ்­நாத் சிங் பேசி­னார். ஒவ்­வோர் ஆண்­டும் அக்­டோ­பர் 27ஆம் தேதி, இந்­திய ராணு­வம் சார்­பில் காலாட்­படை தின­மாக கொண்­டா­டப்­பட்டு வரு­கிறது. 1947ஆம் ஆண்டு இதே நாளில் இந்­திய ராணு­வத்­தின் முதல் சீக்­கி­யர் படைப்­பிரிவு, ஸ்ரீந­க­ரில் உள்ள விமா­னத் தளத்­தில் தரை­யி­றங்கி, காஷ்­மீர் பள்­ளத்­தாக்­கில் இருந்து பாகிஸ்­தான் படை­யி­னரை விரட்­டி­யது. சுதந்­திர இந்­தி­யா­வில் ராணு­வம் மேற்­கொண்ட முதல் நட­வ­டிக்கை இது­வா­கும்.

குண்­டு­வெ­டிப்பு சதி முறி­ய­டிப்பு

இந்நிலையில், ஜம்மு ரயில் நிலை­யம் அருகே 18 டெட்­ட­னேட்­டர்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, ரயில் நிலை­யம் மற்­றும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் தேடு­தல் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தோடு பாது­காப்பு வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

வியா­ழக்­கி­ழமை மாலை ரயில் நிலை­யம் அருகே பையில் அடைக்­கப்­பட்ட 18 டெட்­ட­னேட்­டர் கரு­வி­களும் வெடி­ம­ருந்­து­களும் மீட்­கப்­பட்­டன. அத­னால், அங்கு பெரிய அள­வில் நடக்­க­வி­ருந்த குண்­டு­வெடிப்பு சதித் திட்­டம் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ரயில் நிலை­யத்­தின் அருகே உள்ள வாய்க்­கால் ஒன்­றில் பை கண்­டெ­டுக்­கப்­பட்­டது. இத­னை­யடுத்து, ரயில் நிலை­யம், நடை­மேடை­கள் மற்­றும் வாகன நிறுத்­தும் இடங்­களில் ரயில்வே பாது­காப்­புப் படை­யி­னர் சோதனை, மற்­றும் பாது­காப்­புப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

ரயில் நிலைய சுற்­று­வட்­டா­ரத்­தில் சுற்­றுக்­கா­வல் பணி தீவி­ரப்­படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.