10 பேரின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வங்கிகளுக்கு உத்தரவு

10 பேரின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வங்கிகளுக்கு உத்தரவு

1 mins read
c35d71c5-f8d9-4b13-87d4-61cd5e4f4741
-

புது­டெல்லி: மத்­திய அர­சால் தீவி­ர­வா­தி­கள் என அறி­விக்­கப்­பட்ட பத்து பேரின் தனிப்­பட்ட வங்­கிக் கணக்கு விவ­ரங்­களை மத்­திய அர­சி­டம் தெரி­விக்க வேண்­டும் என வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது. இது­கு­றித்து ரிசர்வ் வங்கி ஒரு சுற்­ற­றிக்­கையை அனுப்­பி­யுள்­ளது. அதில், ஹிஸ்­புல் முஜா­கி­தீன் (எச்­எம்), லஷ்­கர்-இ-தொய்பா (எல்­இடி) உட்­பட தடை செய்­யப்­பட்ட இயக்­கங்­க­ளைச் சேர்ந்த பத்து உறுப்­பி­னர்­களை இந்திய உள்­துறை அமைச்­சு கடந்த அக்­டோ­பர் 4ஆம் தேதி தீவி­ர­வா­தி­க­ளாக அறி­வித்­தது. சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­கள் தடுப்­புச் சட்­டத்­தின் (யுஏ­பிஏ) கீழ் இந்த அறி­விப்பை உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டது.

பாகிஸ்­தானின் ஹபி­புல்லா மாலிக் என்­கிற சாஜித் ஜுட், ஜம்மு காஷ்­மீ­ரின் பரா­முல்லா மாவட்­டத்­தைச் சேர்ந்த பஷீத் அக­மது ரெசி, ஜம்மு-காஷ்­மீ­ரின் சோப்­போர் நக­ரத்­தைச் சேர்ந்த இம்­தி­யாஸ் அக­மது காண்டூ என்­கிற சாஜித், பூஞ்ச் மாவட்­டத்­தைச் சேர்ந்த ஜாபர் இக்­பால் என்­கிற சலீம், புல்­வா­மா­வைச் சேர்ந்த ஷேக் ஜமீல்-உர்-ரெஹ்­மான் என்­கிற பிலால் அக­மது பெய்க் உள்­ளிட்­ட இந்த பத்து பேரின் வங்கிக் கணக்கு விவரங்களை வங்கிகள் மத்திய அரசுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.