கள்ள நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த வந்த ஆடவர் கைது

கள்ள நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த வந்த ஆடவர் கைது

1 mins read
7355b58e-d160-46e4-b5e9-48c44fe3390a
-

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

இங்கு பண பரிமாற்றத்திற்காக ஒருவர் வந்தார். அவர் செலுத்திய 500 ரூபாய் நோட்டுகள் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. அதனை வங்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது அவை கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. காயங்குளம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து கள்ள நோட்டுகளை செலுத்தியவரைப் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவரது பெயர் சுனில் தத் (வயது 54) என்பதும், டிரைவரான அவர், ஓட்டல் உரிமையாளர் அனஸ் (46) என்பவர்தான் அந்தப் பணத்தைக் கொடுத்ததாகவும் கூறினார்.

மேலும் ரூ.25 ஆயிரம் கொடுத்து, ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.