இண்டிகோ விமான இயந்திரத்தில் தீப்பிடித்தது

இண்டிகோ விமான இயந்திரத்தில் தீப்பிடித்தது

1 mins read
ee7cefcc-1a37-4d5e-b278-3cb279b1c202
-

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்து பெங்களூருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இறக்கைப் பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 28) அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின்போது 177 பயணிகள், ஏழு பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.