சூரிய சக்தியில் இந்தியா முன்னணி: பிரதமர் மோடி

காஞ்சிபுர விவசாயிக்குப் பாராட்டு

புது­டெல்லி: சூரிய சக்­தி­யில் உல­க­ள­வில் இந்­தியா முன்­னி­லை­யில் உள்­ளது என்று பிர­த­மர் மோடி பெரு­மி­தத்­து­டன் கூறி­யுள்­ளார்.

'மன­தின் குரல்' எனும் மாதாந்­திர 'மன் கி பாத்' நிகழ்ச்­சி­யின் வழியாக அவர் நேற்று நேரடி உரை­யாற்­றி­னார்.

"சூரிய சக்­தியை இந்­தியா பெரிய அள­வில் பயன்­ப­டுத்­து­கிறது. இன்று நாம் மிகப்­பெ­ரிய சூரிய சக்­தியை உற்­பத்தி செய்­யும் நாடு­களில் ஒன்­றாக மாறி­விட்­டோம். சூரிய சக்தி பய­னீட்­டின் மூலம் பணத்தை மிச்­சப்­ப­டுத்த முடி­யும்," என்று பிரதமர் குறிப்­பிட்­டார்.

"தமி­ழ­கத்­தின் காஞ்­சி­பு­ரத்­தைச் சேர்ந்த எழி­லன் என்ற விவ­சாயி, 'பிர­த­மர் குசும் யோஜனா' திட்­டத்­தின் பயனை அடைந்­துள்­ளார். அவ­ரது பண்­ணை­யில் 10 குதி­ரைத்­தி­றன் கொண்ட 'சோலார் பம்ப்' செட்டை அமைத்­துள்­ளார்.

"இதன் மூலம் அவர் பண்­ணை­யில் விவ­சா­யத்­திற்கு என எது­வும் செலவு செய்­வது கிடை­யாது. விவ­சாய நிலத்­தில் பாச­னம் செய்ய அர­சின் மின் விநி­யோ­கத்தை அவர் நம்­பி­யி­ருக்­க­வில்லை. இதே­போல் சூரிய சக்தி மூலம் பலர் பயன்­அடைந்­துள்­ள­னர்.

"குஜ­ராத்­தின் மோதிரா பகு­தி­யில் பெரும்­பா­லான வீடு­களில் சோலார் எரி­சக்தி மூலம் மின்­சா­ரம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது.

"அங்­குள்ள மக்­கள் சூரிய சக்தி மூலம் மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­வது மட்­டு­மன்றி, அதன் மூலம் வரு­மா­ன­மும் பெறு­கி­றார்­கள்.

"சூரிய மின்­சக்தி போல் விண்­வெ­ளித் துறை­யி­லும் இந்­தியா பல சாத­னை­களைப் படைத்­துள்­ளது. இந்­தி­யா­வின் சாத­னை­களை உல­கம் ஆச்­சர்­யத்­து­டன் பார்க்­கிறது.

"சில தினங்­க­ளுக்கு முன் விண்­வெ­ளி­யில் 36 செயற்­கைக்­கோள்­களை இந்­தியா நிலை­நி­றுத்­தி­யது.

"இந்த சாதனை இந்­தி­யா­விற்கு தீபா­வளிப் பரி­சாக அமைந்­தது. இன்று உல­கமே இந்­தி­யா­வின் சாத­னை­களைக் கண்டு வியந்து நிற்­கிறது.

"இந்­திய இளை­ஞர்­க­ளுக்­காக விண்­வெ­ளித்­துறை வாய்ப்­பு­கள் திறக்­கப்­பட்­ட­தும் புரட்­சி­க­ர­மான மாற்­றங்­கள் வந்து கொண்­டுள்­ளன. மின்னிலக்க துறை­யி­லும் இந்­தியா வேக­மாக முன்­னேறி வரு­கிறது," என்று பிரதமர் மோடி மேலும் தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!