தேர்தல் மேலாண்மை மாநாடு; 11 நாடுகள், அமைப்புகள் பங்கேற்பு

தேர்தல் மேலாண்மை மாநாடு; 11 நாடுகள், அமைப்புகள் பங்கேற்பு

2 mins read
96a584fc-c061-4d79-a557-9f09d41b7987
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் தேர்­தல் ஆணை­யம் நடத்­தும் இரண்டு நாள் அனைத்­து­லக மாநாடு இன்று புது டெல்­லி­யில் தொடங்­கு­கிறது.

மாநாட்­டின் கருப்­பொ­ருள் 'தேர்­தல் மேலாண்மை அமைப்­பு­க­ளின் பங்கு, கட்­ட­மைப்பு மற்­றும் திறன்' என்பதாகும்.

மாநாட்டைத் தலைமை தேர்­தல் ஆணை­யர் ராஜீவ் குமார் தொடங்கி வைக்­கி­றார். நிறைவு அமர்­வுக்குத் தேர்­தல் ஆணை­யர் அனுப் சந்­திர பாண்டே தலைமை ஏற்­றுள்­ளார்.

'தேர்­தல் நேர்மை' குறித்த கூட்டு ­அமைப்­பிற்குத் தலை­மைப் பொறுப்பு வகிக்­கும் தேர்­தல் இந்­திய ஆணை­யம், கூட்டு அணுகுமுறையை மேற்­கொள்ள கிரீஸ், மொரீ­ஷி­யஸ் மற்றும் 'ஐஎப்­இ­எஸ்' எனும் அனைத்­து­லக தேர்­தல் நடைமுறை அற ­நி­று­வ­னம் ஆகி­ய­வற்றை இணைத் தலை­வர்­க­ளாக இருக்க அழைப்பு விடுத்­துள்­ளது.

உல­கெங்­கி­லும் தேர்­தல்­களை நடத்­து­வது தொடர்­பான தேர்­தல் மேலாண்மை அமைப்­பு­கள் மற்­றும் அர­சுப் பிர­தி­நி­தி­க­ளைத் தவிர, யுஎன்­டிபி போன்ற அமைப்­பு­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டு உள்­ளது.

ஆர்­மீ­னியா, மொரீ­ஷி­யஸ், நேப்பா­ளம், கேபே வெர்டே, ஆஸ்தி ரேலியா, சிலி, ஃபெடரல் ஸ்டேட்ஸ் ஆஃப் மைக்­ரோ­னே­சியா, கிரீஸ், பிலிப்­பீன்ஸ், சாவோ டோம் பிரின்­சிப், அமெ­ரிக்கா மற்­றும் மூன்று அனைத்­து­லக அமைப்புகளான 'ஐடி­இ­ஏ­இ­எஸ்', 'ஐஎப்­இ­எஸ்', 'யுஎன்­டிபி' உட்­பட 11 நாடு­கள், அமைப்பு­ க­ளி­லி­ருந்து ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட பங்­கேற்­பா­ளர்­கள் கலந்து கொள்­ள­வி­ருக்­கின்­ற­னர்.

இந்­தி­யா­வில் உள்ள தூத­ர­கங்­கள் மூலம் மேலும் பல நாடு­கள் பங்கேற்க இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

முதல் இரண்டு அமர்­வு­களில் 'தேர்­தல் நேர்­மையை' உறுதி செய்வ தற்­கான பங்கு மற்­றும் கட்­ட­மைப்­பைப் பொறுத்து, தற்­போ­தைய மற்­றும் எதிர்­கால சவால்­கள் குறித்து விவா­திக்­கப்­படும்.

தொடக்க அமர்வு தலைமை உரை ஆற்­றும் தலைமை தேர்­தல் ஆணை­யர் தலை­மை­யில் நடை பெறும்.

நவம்­பர் 1ஆம் தேதி நடை பெறும் மாநாட்­டின் நிறைவு அமர் வில் தேர்­தல் ஆணை­யர் அனுப் சந்­திர பாண்டே உரை­யாற்­று­கி­றார்.