டேங்கர் லாரியில் தீ; நால்வர் கருகி மரணம்

ஐஸவால்: பெட்­ரோல் டேங்­கர் லாரி தீப்­பி­டித்து எரிந்­த­தில் நான்கு பேர் உடல் கருகி மாண்­ட­னர்.

மிசோ­ரம் மாநி­லத்­தில் இந்த அசம்­பா­வி­தம் நிகழ்ந்­துள்­ளது.

அங்­கா­வர்மா மாவட்­டத்­தில் உள்ள துங்­கிலா கிரா­மத்­தில் சனிக்­கி­ழமை அன்று பெட்­ரோல் ஏற்­றப்­பட்ட லாரி ஒன்று சென்றுகொண்­டி­ருந்­தது.

அந்தச் சம­யத்­தில் டேங்­க­ரில் இருந்து திடீ­ரென பெட்­ரோல் கசிந்து ஒழு­கி­யது. இதைப் பார்த்­ததும் ஓட்­டு­நர் லாரியை நிறுத்­தி­னார். ஆனால் லாரி டேங்­க­ரில் இருந்து பெட்­ரோல் வெளி­யே­று­வதைப் பார்த்த கிராம மக்­கள் ஓடி வந்து பாத்­தி­ரங்­களில் பெட்­ரோலை பிடித்­த­னர். அப்­போது எதிர்­பா­ராத வித­மாக டேங்­கர் லாரி தீப்­பி­டித்து எரிந்­தது. தீ மள­ம­ள­வென பற்­றி­யது. இதில் பெட்­ரோல் பிடித்துக் கொண்­டி­ருந்த பொது­மக்­கள் மற்றும் இரு சக்­கர வாக­னங்­களில் சென்­ற­ இருவரும் தீயில் சிக்கி உயி­ரிழந்த னர்.

தக­வ­ல­றிந்து அங்கு வந்த காவல்­துறை, தீய­ணைப்­புப் படை வீரர்­கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­தது. இந்த தீ விபத்­தில் 4 பேர் சம்­பவ இடத்­தி­லேயே உடல் கருகி மாண்­ட­னர்.

மேலும் 18 பேர் தீக்­கா­யங்­க­ளு­டன் உயி­ருக்குப் போராடி வரு­கின்­ற­னர். அரு­கில் உள்ள மருத்­து­வ­ மனை­யில் சேர்க்­கப்­பட்ட இவர் ­களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. இவர்­களில் ஐவ­ரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்பதால் உயிர்ச்சேதம் அதி­க­ரிக்­கலாம் எனத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!