மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் உட்பட 25 பேரின் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதன்படி முன்னாள் அமைச்சர்கள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் அமைச் சர்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உட்பட 25 பேரின் சிறப்பு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினர், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

