செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
f10610c7-a517-47fc-9897-bade124f82da
ராகுல் காந்தி உடன் நடிகை பூனம் கவுர் கைகோத்துசென்றதைசிலர் விமர்சித்துஉள்ளனர். படம்: பிரிதி காந்தி டுவிட்டர் -

ராகுலுடன் கைகோத்து

சென்ற திரைப்பட நடிகை

ஐதராபாத்: இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல்காந்தியின் கரம் பற்றி நடிகை பூனம் கவுர் நடைப்பயணம் மேற்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் சூடு பிடித்து வருகிறது. தெலுங் கானாவில் ராகுல்காந்தி நேற்று நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தெலுங்கு நடிகை பூனம் கவுர் அவருடன் இணைந்து கைகோர்த்து நடைப் பயணம் சென்றார். இந்தப் படம் சமூக ஊடகங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

ராகுல் காந்தியுடன் தான் கைகோத்துச் சென்றதை பிஜேபியின் பிரிதி காந்தி விமர்சித்துள்ளதை

பூனம் கவுர் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

அனைத்துலக எல்லையில்

தென்பட்ட வானூர்தி

புதுடெல்லி: இந்திய-பாகிஸ்தான் அனைத்துலக எல்லையில் வானூர்தியைப் போன்று ஒரு பொருள் பறந்து சென்றதைத் தொடர்ந்து அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சனிக்கிழமை அன்று ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கார்க் வட்டாரத்தில் உள்ள எல்லையில் வானூர்தி போன்று தென்பட்டதாகக் கூறப்படுகிறது. அது என்ன என்பது தெரியாத நிலையில் அதனைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனால் கடைசி வரை அது கண்டுபிடிக்கப்படவில்லை.