மோர்பி பாலம் இடிந்த விபத்து: பாலத்தைப் புதுப்பித்த நிறுவன ஊழியர்கள் கைது

மோர்பி பாலம் இடிந்த விபத்து: பாலத்தைப் புதுப்பித்த நிறுவன ஊழியர்கள் கைது

1 mins read
430b69db-6ac7-4458-81fd-5841e434da99
படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தின் தொடர்பில் பாலத்தைப் புதுப்பித்த நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரிவா நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நடுநிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டன. அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளின் இருக்கும் இடம் தெரியவில்லை என் கூறப்பட்டது.

மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் குறைந்தது 140 பேர் மாண்டனர்.

இந்தியாவில் நடந்துள்ள மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இச்சம்பவம் கருதப்படுகிறது.